நிா. பார்த்தசாரதி 47 அவனுடைய மார்க்சிஸ்ட் நண்பன் பயமே பாவன் களுக்கு எல்லாம் தந்தை-என்ற மகாகவி பாரதியின் வாக். கியத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். சுதர்சன்) னின் இதயத்திலும் அந்த வாக்கியம் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது. புலிக்குட்டி சீநிவாசராவுக்கு இருந்ததைப் போல் வேலை போய்விடுமோ என்ற பயம்கூட அவனுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. அதனால் கூசாமல் ஒல் வொரு விரோதத்திற்கும் காரணமாயிருந்த சிறுமையை முகத்துக்கு முகம் நேருக்கு நேர் அவன் நிமிர்ந்து பார்க்கக் தயாராயிருந்தான். ஆனால் அவனுடைய விரோதிகள் அப்படித் தயாராயில்லை. காரணம் அவர்களுக்கு ஒரு முகம் இல்லை பல முகங்கள் இருந்தன. வகுப்பு முடிகிறவரை சுதர்சனன் தலைமையாசிரியரின் இந்த மெமோ வைத். தொடக்கூட் இல்லை. வகுப்பு முடிந்து அவன் ஆசிரியர்கள் ஒய்வு அறைக்கு வந்தபோது டிராயிங்மாஸ்டர் சிவராஜ் காபி வாங்கிவரப் பையனை அனுப்பிக் கொண்டிருந்தவர் சுதர்சனனுக்கும். சேர்த்து வாங்கிவரச் சொல்லி அவன் காது கேட்கவே. கூறினார். - - . எனக்கு வேணாங்க.." என்று அவன் மறுத்தும் அவர் கேட்கவில்லை. சிவர்ாஜும் சுதர்சனனைப் GLTఇGష இளைஞர். வெளியூரிலிருந்து வேலைக்காக ஆதர்சபுரத்தை தேடி வந்தவர். சுதர்சனன் மேல் அபிமானமும் அன்பும் உள்ளவர். பள்ளிக்கு வந்தபின் காலை மான்ல வேளைகளில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று த்டவையாவது காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர். கூட இருக்கிறவரும் சேர்ந்து காபி சாப்பிட்டால்தான் அவருக்குத் திருப்தியர்க இருக்கும். சினிமாவுக்கோ, காபி சாப்பிடவோ எங்கே போனாலும் கூட யாராவது வரவேண்டும் சிவராஜுக்கு காபி வர வழைத்துச் சாப்பிட்டாலும் கூட இருக்கிற இன்னொரு வருக்கும் வரவழைக்காமல் தனியே சாப்பிட அவரால் முடியாது. செலவுக்குக் கூசுகிற கை அவருடையதில்லை.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/49
Appearance