உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 " . , - நிசப்த சங்கீதம்

அளவு க்னவுகளிலே மிதக்க ஆசைப்பட்டுக்கிட்டிருக்கோம். முதியவர்கள் பலர் அளவற்ற பொறுப்பைப் பற்றி எந்நேர முமே கசப்பான எல்லைவரை வெறும் பேச்சில் வற்புறுத்து கிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.' :

'அடடே! நீங்க நிஜமாவே சிரியஸ்ஸா ஒரு விவாதத் திலே இறங்கிட்டீங்க போலிருக்கே... அதெல்லாம் யூனிவர் சிடி டிபேட்டிங் சொஸ்டிை'யோட போகட்டும்.இப்ப வேணாம்...' - ' '

வேணாம்னா வேணாம்...நீங்கதான் ஆரம்பிச்சீங்க... இல்லாட்டி நான் பேசாமலே விட்டிருப்பேன்." - .

"ஆமா...நீங்க கதை, கட்டுரை, பொயட்ரி அது இதுன்னு நிறைய எழுதுவீங்களே:வர்ரவருஷம் யூனிவர்ஸிடி யிலே டிப்ளமா இன் ஜர்னலிஸம் கோர்ஸ் இண்ட்ரொட்யூஸ் பண்றாங்க. பேசாம அதுலே சேர்ந்து பார்க்கிறதுதானே மிஸ்டர் முத்துராம்?" - -

'இல்லே...நான் மேலே எதுவும் படிக்கப் போறதில்லே. எங்க குடும்ப நெலைமை அதுக்கு ஒத்துவராது. மாசம் ஐநூறு ரூபாய்க்குக் குறையாத வருமானமுள்ள ஒரு வேலையை எத்தினி சீக்கிரமா நான் தேடிக்கிறேனோ அத்தினி சீக்கிரம் எங்க வீட்டுக்கு நல்லது...' .

"நான் வேணா எங்கப்பா மூலமா ஏதாச்சும் டி ரை. பண்ணிப் பார்க்கட்டுமா?' . . .

அவசியமானா நானே வந்து மறுபடி உங்கப்பாவைப் பார்க்கிறேனே; இப்போ இன்னிக்கி ஒண்னும் அவசர மில்லே...ஏகப்பட்ட கூட்டம் இங்கே காத்துக்கிட்டிருக்கே... எப்பவும் உங்க வீடே ஒரு பொதுக் கூட்டம் நடத்தப் போது மான ஆடியன்ஸோடே தயாரா இருக்கிற மாதிரியில்லே தோணுது?' " . . . . - -

-சொல்லிவிட்டு அவன் சிரித்த்போது தேங்காய்ச் சில்லுபோலப் பளீரென்ற வெண்மை மின்ன அவன் சிரித்த சிரிப்பு மங்காவின் கவனத்தைச் சிறைப்பிடித்து ஆண்டது; - கவர்ந்தது. - ... • -