உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 26 - பொய்ம் முகங்கள் புரமே எல்லாப் பகுதிக்கும் வியாபித்து நிலைத்துவிட்டது. ஆனாலும் ஊரின் குணநலன்களும், மனப்போக்கும் மந்த, நிலைகளும் பழைய மலையப்ப நாய்க்கம்பட்டி- என்ற: புராதனமான பெயருக்குப் பொருத்தமாகத்தான் இன்னும் இருக்கின்றன என்று சுதர்சனன் நினைத்தான். முந்திய தமிழாசிரியர் ஊரை விட்டுப் போக நேர்ந்த, கதையே இதற்குப் போதுமான சான்றாக இருந்தது, அந்தக் கதையை இன்னொருமுறை நின்ைத்துப் பார்த். தான் சுதர்சனன். கிராமம் எவ்வளவு பொல்லாதது என்பதை மறுபடியும் அழுத்தமாய் ஞாபகப்படுத்தக் கூடிய தாக இருந்தது அந்தக் கதை. • . - முந்திய தமிழாசிரியர் பாலசுந்தரம் தன் பெயரை "இளவழகன்' என்று தமிழில் மாற்றி வைத்துக்கொண்டிருந்: தார். பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வருவதற்கு முன்பே பத்திரிகைகளில் அவ்வப்போது அவர் எழுதியிருந்த கவிதை' களை ஒன்று திரட்டி ஒரு கவிதைத் தொகுதியாக வெளி யிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுதிக்குக் 'கன்னியின் முத்தம்'- என்று பெயர். இளவழகன் சூட்டியிருந்த பெயர் கன்னிமைக் கனவுகள் என்பதுதான். ஆனால் பதிப்பாளர், 'கவிதைப் புத்தகம் விற்பது சிரமம். பெயராவது கொஞ்சம் "செக்ஸி'யாக இருந்தால்தான் பரவாயில்லாமல் விற்கும். கன்னியின் முத்தம்’னு போடுங்க"-என்று வற்புறுத்திப் பெயரில் முத்தம் கொடுத்து, அச்சிட்டுவிட்டார். தமிழா 'சிரியர் இளவழகன் ஆதர்சபுரத்தில் வேலைக்கு வந்தபோது. தான் எழுதிய இந்தக் கன்னியின் முத்தம் கவிதைத் தொகுதியின் பிரதிகள் சிலவற்றைக் கையோடு கொண்டு. வந்திருந்தார். வந்த புதிதில் அவர் கவிதை எழுதுவார். என்பது அந்த ஊருக்கு ஒரு புதுமையாக இருந்தது. ஆனால் நாளடைவில் அவர் கவிதை எழுதுவதை அந்த ஊரார் ஒரு குணமாகவும் நினைத்து அங்கீகரிக்காமல், குற்றமாகவும். நினைத்து வெறுக்காமல் மறந்துபோய் விட்டு விட்டார்கள், இருந்தாலும் படிக்கிற மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை புதுத்தமிழ் வாத்தியார் இளவழகன்