உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நிசப்த சங்கீதம்

இந்த ஊரையே வெறுத்து அவசரமாக எங்கோ ஒடிப் போகிறாற் போலிருந்த ஒரு காந்தி சிலையருகே வந்ததும் மேற்குப் பக்கமாகத் திரும்பியது,

அந்த சைக்கிள் ரிக்ஷாக்காரன் பேசிய கலப்பு மொழியைப் புரிந்துகொள்வது முத்துராமலிங்கத்துக்குச் சிரமமாயிருந்தது. ரிக்ஷாக்கார்ன் போதையிலிருக்கி நானா, சுயஉணர்விலிருக்கிறானா என்றுகூட நிதானிக்க முடியவில்லை. - ..

உட்புறம் பசும் பாய் விரித்தாற்போன்ற புல்வெளி. உள்ள தோட்டத்துக்கு அப்பால் பங்களா இருந்த ஒரு காம் பவுண்டுக்கு முன்னால் ரிக்ஷா நின்றது.

"இந்த ஊடுதான் சார்." இரண்டு ரூபாய் வாடகையை எடுத்துக் கொடுத்து விட்டு சூட்கேஸுடன் இறங்கிய முத்துராமலிங்கத்தை ரிக்ஷாக்காரனின் குழைந்த குரல் தடுத்துநிறுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது. . .

'எதினாச்சும் மேலே போட்டுக் குடு சார்!" - 'உனக்குப் பேசின தொகையைக் குடுத்தாச்சே ஐயா? நான் எதுவும் கொறைச்சுத் தரவியே." -

"போட்டுக் குடு சார்......: முத்துராமலிங்கத்துக்கு இது புதிய அனுபவம். பேசிய பேச்சை மீறும் வாடிக்கை இரு தரப்பிலும் இல்லாத ஒரு பிரதேசத்திலிருந்து வருகிற அவன், வாக்கு-வாக்குச் சுத்தம்-வார்த்தை நாணயம்-வார்த்தையைக் காப்பாற்று வது-இவைபற்றி எல்லாம் அதிக அக்கறை காட்டக்கூடிய சுபாவமுடைங்வன். அவனுக்கு ரிக்ஷாக்காரனின் கெஞ்சல் தர்ம்சங்கட்த்தையும் தயக்கத்தையும் உண்டாக்கியது.

த ம் ெ * யலாக அப்போது உள்ளே யிருந்து விற்ைப்பாக நிமிர்ந்த நடையுடன் கனமான பூட்ஸ்கள் ஒலிக்க ஒரு கான்ஸ்டபிள் நடந்து வரவே, "சரி, ந்ா