உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23

என்னது? என்ன ஆச்சு?' என்று பதறிப் போய்த் தான் எழ முயன்று தன் மேலே விழுந்திருப்பது ஒரு பெண் என்ற கூச்ச உணர்வுடன் அவளை எழுப்பிவிட விரைந்த முத்துராமலிங்கத்துக்கு, அவள் எழுந்திருக்கவே விரும்பா தவள் போல் லாரி குலுங்கி நின்ற அதிர்ச்சியில் மூர்ச்சித்து மயங்கி விட்டாளோ என்ற சந்தேகத்தோடு பார்த்தால் கண்மணி கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளை மெதுவாக விடுவித்துத் தன்னை அவளிட மிருந்து நீக்கிக்கொண்டு சாலையில் என்ன நடந்தது என்று பார்க்க மற்றவர்களோடு லாரியிலிருந்து கீழே இறங்கினான் முத்துராமலிங்கம். ۔۔۔۔

சாலையில் முன்னால் போய்க்கொண்டிருந்த வேறு ஒரு லாரி நட்ட நடுவே குடை சாய்ந்து பாதையை மறித்தாற். போலக் கவிழ்ந்திருந்தது.

அதனால் ஏற்பட்டி கூக்குரல்களும், குழப்பமும் பின் னால் வரிசையாக வந்து கொண்டிருந்த பல லாரிகளையும்

பஸ்களையும் பாதித்தன. . . . . . - கவிழ்ந்த லாரியில் பின்புறம் இருத்தவர்களில் பெரும் பாலோர் குதித்துத் தப்பிவிட்டனர். சிலருக்குக் காயம், சிராய்ப்பு. ஊமை அடிகள். காபினில் இருந்த டிரைவர்,

கிளீனர் முதலிய சில ஆட்களுக்குச் சிறிது பலமான அடி.

அவர்கள் கட்சி ஆட்கள் என்பதற்காக அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் முத்துராமலிங்கம் பம்பர மாக இயங்கி அவர்களுக்கு உதவினான். காயம் அடைந்த வர்களை வேறு ஒரு லாரியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான். 'கட்சி'- அதுவும் ஆளும் கட்சி அநுதாபிகள் ஏறிவந்த லாரி என்பதால் போலீஸ் கெடு பிடிகள் அதிகம் இல்லை. உதவிகள் கூட இருந்தன.

நடுச்சாலையில் அகாலத்தில் இம்மாதிரி விபத்து வேளைகளில் அறிவுபூர்வமாக உடனே செய்யப்பட வேண் டியது என்ன என்று புரியாமல் மலைத்தும் திகைத்தும்.