15. தீவினை அச்சம் கெட்ட காரியங்களைச் செய்யப் பயப்படுதல். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (ப.உ) தீயவை-(தம் நன்மை கருதிச் செய்யப்படும்) கெட்ட காரியங்கள், தீய பயத்தலால்-பின்னல் கெடுதியையே உண்டாக்குவதால், தீயவை-அக்கெட்ட காரியங்கள், தீயினும்-நெருப்பைக் காட்டிலும், அஞ்சப்படும்-பயப்படத் தக்கனவாம். (க.உ) தீமை தரும் காரியங்களச் செய்யப் பயப்படவேண்டும். தீயவை-எழுவாய் ; அஞ்சப்படும்-பயனிலை. 16. ஒப்புரவு அறிதல் உலகநிலை உணர்ந்து உதவி செய்தலை அறிதல். ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேர்அறி வாளன் திரு. (ப-உ) உலகு-உலக நிலையை, அவாம்-உணர்ந்து உதவி செய்ய விரும்பும், பேர் அறிவாளன்-பெரிய அறிவாளியினுடைய, திரு-செல்வமானது, ஊருணி-ஊரார் மொண்டு தண்ணீர் உண்ணும் குளம், நீர்-தண்ணீரால், நிறைந்தஅற்று -நிறையப்பெற்ற அத்தன்மை போலாகும். ஏ அசைச் சொல். (க.உ) உலகத்தார்க்கு உதவுபவன் செல்வம் ஊருணிபோல் நிறைந்து பயன்படும். திரு-எழுவாய் அற்று-பயனிலை. 14
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/14
Appearance