உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 அவர்களே. ஆனல் அன்று, 1944 இல் நானும் இவரும் பச்சையப்பர் கல்லூரியில் ஒருசேரப் பணியாற்றுவோம் என்று நினைக்கவில்லை. எங்கள் இருவர் தம் குடும்பமும் ஒருங்கிணைந்து உற்று வாழும் எனவும் எண்ணவில்லை. ஆம்! இன்று இவர் மறைந்த பிறகும் அவர்தம் மக்க ளொடும் ஒக்கலொடும் என் உறவு ஒட்டி நிற்பதோடு இவரும் என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளமையை ஈண்டுக் குறிக்கக் கடமைப் பட்டுள்ளேன். பச்சையப்பர் கல்லூரியிலும் சரி, பல்கலைக் கழகக் குழுக்கள், பிற பொது நிலையங்கள் ஆகியவற்றிலும் சரி அவர் விட்ட இடங்களை நான் நிரப்பும் நிலை நான் ஒய்வு பெறும்வரை நீடித்துள்ளமையை எண்ணுகின்றேன். திரு. வி. க. அவர்கள் தமிழ்நாட்டுப் பர்னட்ஷா" என்று மு.வ.'வைக் கூறியமைக் கண்டோம். ஆம்! இவர் பர்னட்ஷா நூல்கள் பலவற்றைப் படித்தார். பல கருத் துக்களைத் தம் நூல்களிலும் பிணைத்துள்ளார். மேலும் வெல்ஸ், ஷெல்லி போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் நூல்களையும் காண்டேகர் போன்ருர்தம் நாவல்களையும் குறளையும் தாயுமானவர் பாடல் போன்ற சமய இலக்கியங் களையும் மு.வ. நன்கு பயின்ருர். இவர் பயின்ற நிலையும் போற்றும் மரபும் இவர்தம் நூல்கள் பலவற்றுள் காண லாம். இவர்தம் இலக்கியத் தெளிவுக்கும் திறய்ைவுக்கும் செம்மைக்கும் அத்தகைய நல்லவர்தம் நூல்களே வழி காட்டிகளாக அமைந்தன எனக் கொள்ளல் பொருந்தும். பச்சையப்பரில் பச்சையப்பரில் டாக்டர் மு. வ. அவர்கள் 1939இல் புகுந்தார். 1961 வரையில் இருந்தார். இந்தக் காலம்தான் இவர் இலக்கியத்துக்குப் பெருந் தொண்டாற்றிய காலம் எனலாம். இவர் பயின்ற நூல்கள் பலப்பல. பயின்றமைக் குச் சான்ருக ஓரிரு ஆண்டுகளில் கல்லூரி நூல்நிலையத்தில் இவர் எடுத்த நூல்களின் பட்டியலைப் பிற்சேர்க்கையில்