உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வயது சின்னவள். ஒன்பது வயதுள்ள பெண் அஞ்சு வாள் என்று நீயும் அம்மாவும் எண்ணியிருப்பீர்கள். மோட்டாரில் காஞ்சிபுரத்திற்குச் செல்வதைவிட மகிழ்ச்சியாகவே மங்கையர்க்கரசி விமானத்தில் எங்க ளோடு பறந்துவந்தாள்.” (யான் கண்ட இலங்கை. ப. 19) இவ்வாறே வடநாட்டு யாத்திரையிலும் சிறப்பாகக் காஷமீர் யாத்திரையிலும் எங்கள் இரண்டு குடும்பங்களும் ஒன்றிச் சென்றன. அந்த யாத்திரையின் முடிவில் அதைப்பற்றியும் ஒரு நூல் எழுதப் போவதாகவும் ஆல்ை அது தனித்த நூலாக இல்லாமல் கதைப் போக்கில் அமைந்திருக்கு மென்றும் சொன்னர். அதிலேயும் நான் என் பெயரைக் குறிப்பிடவேண்டா எனக் கேட்டுக் கொண்டேன். எனவே என் மகன் மெய்கண்டானைச் சான்ருேராக்கி அந்த மண் குடிசை"யில் சேர்த்துக் கொண்டார். இவ்வாறே இவர் நாவலில் வரும் பல பாத்திரங்களும் இவரொடு பழகியவராகவும் அறிமுகமானவராகவும் உள்ள மையை அறிந்தோர்கள் உணர்வர். அப்படியே கதைகளில் வரும் பல் நிகழ்ச்சிகளும் உண்மையில் நடந்தனவே என்ப தையும் உணர்தல் வேண்டும். அதேைலயே இவருடைய கதைகள் பலவும் இவருடைய ஊர்களாகிய வேலம், திருப் பத்துார், ஆர்க்காடு, வேலூர், சித்துர் அவற்றைச் சேர்ந்த சிற்றுார்கள் ஆகியவற்றில் நிகழ்ந்தனவாக உள்ளன. கோடை நாட்களில் பெங்களுரில் வாழ்ந்து அதன் குழலை நன்கு அறிந்த காரணத்தால் சில கதைகளில் பெங்களுர் இடம் பெறும். அப்படியே காசி, தில்லி, பம்பாய், காஷ்மீர் போன்ற இடங்களுக்குச் சென்ற நிலையிலேயே அவைகளை யும் அவற்றில் நடந்த சில நிகழ்ச்சிகளையும் இணைத்துத் தம் கதைகளின் போக்குகளை அமைத்துக் கொண்டார்.இப்படி யே இவர் மலேயா போன்ற இடங்களுக்குச் சென்ற வகைகளையும் இப்பல்கலைக் கழகத்துணைவேந்தரான பிறகு வெளிநாடுகள் சென்றிருந்தவற்றையும் பற்றியெல்லாம் தனித்தனியாகவும் தொகுத்தும் சில நூல்கள் எழுதத் திட்ட