உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசையசை இயதொருகை

110அங்குசங் கடாவ வொருகை யிருகை
ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை
மார்பொடு விளங்க வொருகை
தாரொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியொடு மிமீசைக் கொட்ப வொருகை

115பாடின் படுமணி யிரட்ட வொருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட வியற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்