உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தாலும் விடாதே. பிறகு அது உன்னை விடாது' என்கிறர். அப்படியே பாரதி பாடலையும் அருட்பாவையும் படித்து வரும் ஒரு பாத்திரத்தையும், அதல்ை அப்பாத்திரம் செம் மையுற்ற நிலையினையும் நமக்குக் காட்டுகிருர். (மலர். 102) மாதவி கோவலர் நிலையில் உள்ளத் தெழுந்த கானல்வரி பாட்டாக மட்டுமன்றி அப்பாடல் பாடிய படமும்.'யானும் நீயும் எவ்வழி அறிதும்' என்ற குறுந்தொகைப் பாடல்வழித் தோன்றிய படமும் (மலர் 118) நம் கண் முன் காட்டப் பெறுகின்றன. தாயுமானவர் பைங்கிளிப் பாடல் போற்றப் பெறுகின்றது (செந். 125).'கண்ணே கருத்தேஎன்எண்ணே எழுத்தே கதிக்கான மோனவடிவே என்று இவர் அடிக்கடி உருகிப்பாடும் தாயுமானவர் பாடலும் பிற பாத்திரங்களின் வாயால் பாடப் பெறுகிறது (மலர். 170, அகல் 311).-தாயு மானவர் பைங்கிளிக் கண்ணியைப் பற்றித் தாம் பழகிய சிந்தாதிரிப்பேட்டைத் தமிழ்ச் சங்கத்தோடு இணைத்துப் பேசுகிருர் (செந். 125). நன்றுடையானை' 'தீயதில்லானை' என்றும் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென் னுள்ளம் குளிரும்மே என்றும் இளங்குழந்தை ஞானசம் பந்தர் பாடிய தேவாரப் பாடல் அடிகள் (மலர் 175) அப்படியே நமக்கு நினைவூட்டப் பெறுகின்றன. ஷேக் ஸ்பியர் ஆம்லெட் நாடகமும் அதைத் தமிழில் மொழிப் பெயர்த்த சம்பந்த முதலியாரின் அமலாதித்யன்’ என்ற நாடகமும் நமக்கு அறிமுகமாகின்றன. (மலர் 215) இந்த நூல் எழுதிய ஆண்டில் பம்மல் சம்பந்த முதலியார், பச்சை யப்பர் தமிழ்மன்றஆண்டுவிழாவில் தாமே எழுதிய சபாபதி நாடகத்தைக் தாமே சபாபதி வேடம்பூண்டு நடித்துக் காண் பித்தார் என்ற நினைவு இருப்பவர்களுக்கு இவர் இத்தகைய நூல்களைப் பிணைத்தெழுதும் காரணங்கள் நன்கு விளங்கும். தாம் பயின்ற பழைய திருப்பத்துார் பள்ளியின் தமிழாசிரிய ரையும் இவர் சுட்டத்தவறவில்லை.(மலர் 236) பச்சையப்பர் கல்லூரி நூலகத் தலைவரை எண்ணியே நூலகத் தலைவராக அருளப்பரின் தந்தையைச் சுட்டுகிறர்.(கள்ளோ 40) சிலப் பதிகார நூல் பலவிடங்களில் பல பாத்திரங்களால் எடுத் தாளகப் பெறுகின்றது. (மலர் 244. அகல் 311) மணிமேகலை