பக்கம்:சிந்தனை மேடை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. போல ஒரு புனிதமான இயக்கமாக இருந்திருக்க வேண்டு. மென்று நாம் அநுமானிக்க முடிகிறது. கற்பிப்பது என்பது ஒரு காலத்தில் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாரா மல் செய்யப்படுகிற புனித இயக்கமாக இருந்ததென்று நினைத்துவிட்டு ஒரு விநாடிக்குப்பின் அப்படி இருந்த பொற் காலத்தை மீண்டும் எண்ணிச் சிந்தனையைப் பின்னேக்கி ஓட விடும் போது உங்களுக்கு மெய்சிலிர்க்கிறதல்லவா? அப்படி இருந்த காலத்தில் அறிவை வழங்குகிறவன் எவனே அவனும் தெய்வமாக மதிக்கப் பெற்றிருப்பான் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இப்போது மதிக்கப்படுகிற காரணங் களும். மதிக்கிற காரணங்களும் விதம் விதமாக மாறியிருக் கின்றன. பணமுடையவர்கள் சிலரை அவ்வுடைமைக்காகத் தெய்வங்களாகத் தொழுகிருேம் புகழுடையவர்கள் சிலரை அவ்வுடைமைக்காகத் தொழுகிருேம். பதவியும் செல்வாக் கும் உள்ளவர்கள் சிலரை அவற்றுக்காகத் தொழுகிருேம். குணங்களுக்காகவும் அறிவுடைமைக்காகவும், அவற்றை உடையவர்களைத் தேடித் தொழுவது இன்றைய சமுதாய வாழ்க்கையில் மி க வு ம் குறைந்து ப்ோயிருப்பதாகவே தோன்றுகிறது. எந்த விதத்தில் எப்படி இந்த மதிப்பீடு குறைந்து போயிற்று! என்று சற்றே சிந்தித்துப் பார்க்க லாம். ஏணிகளைப் போல இன்றைய நிலையில் இந்த நாட்டுக் கல்விக் கூடங்களை யும், அவற்றில் உழைக்கும் ஆசிரியப் பெருமக்களையும் பற்றிச் சிந்திப்பதற்கு நி ைற ய ப் பிரச்னைகள் இருக்கின் றன. ஆசிரியராக இருப்பதென்பது வேத காலத்து இலட்சியத்தைப் போல் இன்று பயன் எதிர்பாராத புனித இயக்கமாக இல்லை. அப்படி இருப்பதும் இன்று சாத்திய மாகாது. எனவே இன்றைய நிலையில் கற்பிப்பதென்பதை உழைப்பாகவும் தொழிலாகவும்தான் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் அதை அப்படித்தான் கருதியிருக்க முடியும். சி. மே. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/55&oldid=825953" இலிருந்து மீள்விக்கப்பட்டது