பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

65

– என்றார் ஜோதிடர். கமலக்கண்ணனுக்கு உச்சி குளிர்ந்தது. முழுமையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைச் சன்மானமாக எடுத்துவைத்து வெற்றிலைப்பாக்குப் பழங்களோடு சோதிடருக்குக் கொடுத்தனுப்பினார் அவர். “என்னாங்க உங்களுக்குச் ஜோஸ்யத்திலே நம்பிக்கையில்லை என்று அடிக்கடி சொல்லுவீகளே! இன்னிக்கி என்னவோ ஒரேயடியாக் குலாவினிங்களே? என்ன விஷயம்?’ – என்று குத்தலாகக் கேட்டாள் மனைவி.

“வீடு தேடிவந்த பெரியவரைத் திருப்பியனுப்பிடப் படாதேன்னு ஏதோ கேட்டுக் கொண்டேன். பணமும் கொடுத்தனுப்பினேன்”– என்று மனைவியிடம் மெல்லச் சமாளித்தார் கமலக்கண்ணன். மனைவியின் முகத்தில் அவர் கூறியதை நம்பாதது போன்ற கேலிப் புன்முறுவல் மலர்ந்தது.

“ஏதோ இப்பவாவது ஜோஸ்யம், சாமி, கோவில் பணி எல்லாத்திலியும் நம்பிக்கை வருதே”...என்று வியந்தபடி பேசினாள் அந்த அம்மாள், கமலக்கண்ணன் அதை மறுத்தோ ஒப்புக்கொண்டோ மறுமொழி ஒன்றும் கூறவில்லை. மெளனம் சாதித்துவிட்டார். ‘கோழைகள் ஒவ்வொருவரும் தான் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சோதிட மூலம் பார்க்கிறார்கள்’– என்ற வெளிநாட்டுப் பழமொழி ஒன்றை அடிக்கடி தன் மனைவி உட்படப் பலரிடம் கூறியிருக்கிறார் கமலக்கண்ணன். இப்போதோ ஆசை மிகுதியில் அவரே ஒரு கோழையாகி மீண்டிருந்தார்.

அன்றிரவு கிளப்பில் சீட்டாடும்போது ஒரு சகதொழிலதிபர் கமலக்கண்ணனைக் கேலி செய்தார்:

“இனிமே இவரைக் கிளப் பக்கம்கூடப் பார்க்க முடியாதப்பா, ஏராளமான பொதுக் காரியங்களிலே இறங்கிப் பிரமுகராகி விட்டார்.”

“அட நீங்க ஒண்ணு! நீங்களும் சரி, நானும் சரி பொது, வாழ்க்கையிலிருந்து விலகி எந்த வியாபாரத்தையும் தொழிலையும் இன்னிக்கி நடத்திவிட முடியாது. அதனாலே நாலு எடத்துக்குப் போகணும் வரணும். பொது வாழ்க்கையிலேயும் தாராளமாகக் கலந்துக்கணும். எதையும் ஒதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/67&oldid=1047542" இலிருந்து மீள்விக்கப்பட்டது