பக்கம்:புதிய பார்வை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3 #%

படையும் எழுத்து கடையும் வாமாட்டேனென்கிறது. கடையும், கருத்தாழமும் உள்ள புதுமைப்பித்தன், கு ப.ரா. போன்றவர்கள் எல்லாம் ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியுள்ள வர்களே. அதல்ைதான் அவர்களால் அர்த்தபாவம் Bரம்பிய விதத்தில் எழுத முடிந்தது.

இப்போது எழுதும் தமிழ் எழுத்தாளர்களில் பலருக்கு. அர்த்தபாவம் என்பதே தெரிவதில்லை. தமிழகத்தின் மிக மிகப் பிரபலமான நாவலாசிரியர் ஒருவர்,

போலீஸ்காரன் திருடனே அழைத்துக் கொண்டு போனன் - என்று எழுதியிருப்பதைச் சமீபத்தில் படித்தேன். அழைத்துக் கொண்டு என்பது சுமுகபாவம். அதைப் பயன்படுத்த வேண்டிய இடம்,

'திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு போளுன்."

‘விருந்துக்கு அழைத்துக்கொண்டு போன்ை' என்பன போன்றவை. போலீஸ்காரன் திருடனே இழுத்துக் கொண்டு போளுன் என்று எழுதவேண்டியதைப் போலீஸ் காரன் திருடனை அழைத்துக்கொண்டு போனன்” என்று எழுது வதும், திருமணத்திற்கு இழுத்துக்கொண்டு போனன் என்று. எழுதுவதும் எத்தனை ரஸ்பேதமாயிருக்கிறது பாருங்கள்.

மொழியின் துணுக்கங்களே என்றே தேடி ஒரு. 'லிங்விஸ்டிக் மாணவன் படிப்பதுபோலப் படிக்காமல் இலக்கிய கோக்குடன் மட்டும் படித்தால்கூட இலக்கியப் பயிற்சி ஒருவனே நல்ல நடை எழுதப் பழக்கப்படுத்தி விடுகிறது அல்லது மோசமான நடை எழுதுவதைத் தடுக்க வாவது செய்கிறது. இருபத்தைங்து ஆண்டுகளுக்கு மேலாக, எழுதிப் புகழ்பெற்ற தமிழ்மக்களின் அபிமான காவலாசிர் யரின் நாவலிலேயே இப்படி ஒரு வாக்கியத்தைப் பார்க்க முடிகிறதென்ருல் என்ன சொல்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/83&oldid=598113" இலிருந்து மீள்விக்கப்பட்டது