பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

119

பினரா–ன்னெல்லாம்’ ஊழியர் கூட்டத்திலே – என்னைக் கேள்வி கேட்டு மடக்கினானே – யாரு அந்த ஆளு?”...

“அடடே அந்த ஆளா? காந்திராமன்’னு பேரு. ‘சர்வோத்யக் குரல்’ங்கிற பத்திரிகைக்கு ஆசிரியர். தீவிர உறுப்பினர். சரியான காந்தி பக்தர்...ரொம்ப முரண்டுக் காரரு... நெளிவு சுளிவுகூடப் பார்க்கத் தெரியாது...”

“அந்த ஆளென்னமோ தேசியமே தனக்குத்தான் சொந்தம்னு நினைக்கிறாப்பலருக்கு...”


“ரொம்பக் கொள்கைப்பிடிப்புள்ள ஆள். தீவிரமான தேசியவாதி...”


“அது சரி! அதுக்காக மத்தவங்களை அவமானப் படுத்தணும்னா சொல்லியிருக்கு...”


“அந்த ஆள் கிடக்கிறாருங்க...உங்க செல்வாக்குக்கு முன்னாடி ஒண்னும் பண்ணிட முடியாது!...நீங்க நாளைக்கு மந்திரியா வந்துட்டீங்கன்னா கட்சியிலே உங்களுக்கு ஒரு பிடி இருக்கும்...”

“கட்சிக்கு நாம் எவ்வளவோ செய்யிறோம். கட்சி தான் சமயத்துலே நம்மை மறந்துடுது....” –என்று ஒரு தினுசாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கமலக்கண்ணன்.

“–சுயேச்சையாக நின்று ஜெயித்தாலும்–நான் தேசியவாதியானபடியினால் கட்சியில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றுகிற உத்தேசம் உண்டு’–ன்னு பத்திரிகையிலே இப்பவே ஒரு அறிக்கை விட்டுட்டிங்கன்னா நல்லாயிருக்கும். இல்லையின்னா மந்திரியா வர்ரதுக்காகத் தான் கட்சியிலே சேர்ந்தார்னு பின்னாலே நாலு பேருவம்பு பேசுவாங்க...”–என்று கமலக்கண்ணனைத் தனியே அழைத்து. இரகசியமாக யோசனை கூறினார் கட்சித் தலைவர். “நாளைக் காலை எடிஷன்லியே வர்ராப்ல இப்பவே நம்ம தினக்குரலுக்குச் சொல்லிடறேன்” என்றார் கமலக்கண்ணன்.

“சும்மா–பி.டபிள்யூ.டி. மீன்வளப் பாதுகாப்புன்னு உருப்படாததைத் தலையிலே கட்டிடப்போறாங்க... கேக்கறப்புவே, கல்வி, அல்லது தொழில்தான் வேணும்னு கண்டிப்பாக்கேளுங்க... நம்ம ஆளுங்களுக்கு ஏதோ நாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/121&oldid=1048867" இலிருந்து மீள்விக்கப்பட்டது