பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காலந்தோறும் பெண் கணவாய் வழியே இந்நாட்டுக்குள் அடிவைத்தனர். இக்காலங்களில் இங்கு தென்பட்ட பெண்களே, படையினரின் ஆக்கிரமிப்புக்கு முதலில் இலக்காயினர். பெண், அந்நிய வித்துக்குக் கட்டாயமாகத் தன் கருப்பையில் இடமளிக்க வேண்டிய கொடுமைக்காளானதும், அக்கால சாத்திர விதியாளரிடையே இது பிரச்னையாயிற்று, அவளுக்குச் சில சுத்தி பரிகாரச் சடங்குகளைச் செய்து. கருப் பத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ம்மிருதியில் இடம் அளித்தார்கள். ஆனால், இது, இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல் நூற்றுக்கணக்கில் பரவலாக ஏற்படத் தொடங்கியதும், சாத்திர நெறியாளரை அச்சம் பிடித்தது. அத்துணை அந்நியவித்துக்களும், இவர்களுடைய சமுதாயத்தில் உரிமை பெறுமானால் என்ன விளையுமோ? எனவே, வித்துக்கு இடமளித்த நிலத்தையே உதாசீனம் செய்துவிட முடிவு கட்டினார்கள். கணவனே தெய்வம். இந்த சம்பிரதாய சமுதாயமே தனக்குப் பாதுகாப்பு என்று குருட்டுத் தன்மையுடன் பற்றிக் கொண்டிருந்த பெண் அந்நியனால் குலைக்கப்பட்டதும், நடுத்தெருவில் வந்து வீழ்ந்தாள். முகமதிய ஆட்சியாளரிடம் காமக்கிழத்தியாகவும் பணிப்பெண்ணாகவும் அதற்கும் இட மில்லாத வகையில் சக்கையாகத் துப்பப்பெற்ற நிலையிலும் வீழ்ச்சியுற்றாள். - கற்பென்றும் தொண்டென்றும் ஒரு தவநெறியே வாழ்க்கை எனப் புகுத்தப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட பெண்டிர், அந்நியரின் காலடிகளில் வீழ்ந்து இறுதி வாழ்வைத் தொடரவும் இயலாமல் அல்லலுற்றனர். இளமையில் தந்தை குமரிப்பருவம் வந்ததும் கணவன்; பின்னர் முதுமையில் மைந்தன் என்று இவளுடைய