பக்கம்:தமிழ் உரை நடை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ் உரை நடை உள்ளத்தில் ஏதோ ஒரு குறிப்போடுதான் அப்பாடல்களைப் பாடினன் என நினைத்தாள் மாதவி. எனவே தானும் அவ்வாறே குறிப்புத் தோன்றப் பாட நினைத்தாள்; அவன் கையிலிருந்த யாழை வாங்கிள்ை; பாடத் தொடங்கிள்ை. இக்கருத்தை ஆசிரியர் இளங்கோவடிகள் தம் கட்டுரை வகையினலேயே காட்டுகின்ருர். இன்றைய வானெலி நாடகங். களிலும், தெருக்கூத்துக்களிலும் . ஏன் படக்காட்சி களிலுங்கூடக் காட்ட முடியாத சில பகுதிகளே இடையில் யாராவது உரை பெறு கட்டுரையால் உணர்த்தி மேலே கதையை நாடகவழி நடத்திச் செல்வதை நாம் காண் கிருேம். ஆம். அந்த வகையில் அமைவது போல, இந்தக் கட்டுரை அமைகின்றது. காதை - கானல்வரி-வரிப்பாட்டுக் களே வாரி வீசுக்கொண்டே செல்கிறது. அதற்கு இடையில் யாழ் கைமாறும் செயலே ஆசிரியர் கூறியாக வேண்டும். அந்த கிலேயிலேதான் உரைநடை வருகிறது. இதோ அடி களின் உரைநடை: . "ஆங்குக் கானல் வரிப்பாடல் கேட்ட மானெ டுங்கண் மாதவியும், மன்னும் ஒர் குறிப்பு உண்டு, இவன் தன் நிலை மயங்கினன்,' எனக் கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கித் தானும் ஓர் குறிப்பினள் போல் கானல் வரிப் பாடல் பாணி, நிலத்தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ, கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கு மன் ' என்பதே அக்கட்டுரை. இதுவும் அகவற் செய்யுளைப் போன்று அமைந்து செல்லினும், ஆய்ந்து பார்க்கின் இது வேருகவே தெரியும். மேலே நாட்டு ஆசிரியர்கள் கண்டபடி, இதில் சந்தம் (Rhythm) கர்ணப்படுமே ஒழிய வேறு செய்யுள் அமைப்பு இல்லை. இருப்பின், இதைக் கட்டுரை என்று பிரிக்கக் காரணமே இல்லை யன்ருே! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/79&oldid=874766" இலிருந்து மீள்விக்கப்பட்டது