உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 5駆

'பேசாம இந்தப் பொம்பளையையும் ஒரு மந்திரி யாகவே போட்டுப்பிடலாம்! என்ன அமர்க்களமாப் பேசுது

பார்த்தியா?” -

இது முத்துராமலிங்கத்தின் அருகே நின்ற ஒருவர் வியந்து கூறியது. முத்துராமலிங்கத்தையே ஒரு விநாடி அந்தச் சொல்லலங்கார வேகமும், வசீகரமும் தன்னை மறக்கச் செய்தன. -

மிக அழகிய சொற்றொடர்களும், அலங்கார வார்த்தைப் பந்தல்களும் செயல் மலட்டுத்தனத்தை மறைக்கும் போர்வைகளாகவே இந்நாட்டில் பயன்பட்டு வருகின்றன என்பதை அவன் முயன்று நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. செயல்களைக் கவனிக்காமல் வெறும் பேச்சிலே மயங்கிச் சோரம் போகிற இந்த மக்களை யாரும் எதுவும் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக எண்ணினான் அவன். .

கண்மணியின் பேச்சு அருவியாகக் கொட்டிக் கொண் டிருந்தது! மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. மக்கள் மயங்கிக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அர்த்தம் புரியாமலே அடங்கிப் போய்ச் செவிமடுத்துக்

கொண்டிருந்தார்கள். .

நாளைக்கு எளிமையாக வாழ்வது எப்படி என்று மக்களை இன்று பயிற்றுவிக்க ஏழு கோடி ரூபாய்ச் செலவில் ஒரு திட்டம் தீட்டப் போகிறோம். வேலையில்லாத் திண்டாட்டத்தையும், ஏழ்மையையும் ஒழிப்பதற்கான பிரச்சார நாடகங்கள் போட்ப் பல கோடி ரூபாய் ஒதுக்கி யிருக்கிறோம்."- - - - . . . .

இதைக் கேட்டு முத்துராமலிங்கத்துக்குச் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. . . மூன்று பல்கலைக் கழகங்களில் படித்தப் பட்டம் பெற்றவர்களுக்கே வேலை இல்லை. இன்னும் முப்பது