உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 6s.

"நான் என் படிப்பைச் சொல்லி மானம் மரியாதையா ஒரு வேலை தேடிப் பிழைக்கலாம்னுதான் இங்கே மெட் ராசுக்கு வந்தேன்! நீ சொல்றதை எல்லாம் கேட்டா மர்னம் மரியாதை உள்ளவனுக்கு இங்கே வேலை கெடைக் கறதே கஷ்டம்னு தெரியிது. ..

"படிச்சவன் எல்லாம் உன்னை மாதிரி மானம், மரியா தையைப் பத்திக் கவலைப்படறவனாத் தெரியிலேப்பா. படிச்சவனாயிருந்தும் உன்னை மட்டும் போனாப் போகு, துன்னு மதிக்கலாம்னு இந்தச் சின்னிக்குத் தோணுது.

உனக்குத் தோன்றி என்ன கிடைக்கப்போகுது: எனக்கு ஒரு வேலையைக் கொடுக்கப்போற யாரோ ஒருத்த. னுக்கு அது தோன்றினால்தான் நல்லது...' -

'உனக்கு என்ன மாதிரி வேலை வேணும்'... - "என்னமோ நீதான் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ்.

நடத்தறமாதிரியில்லே கேட்கிறே?" - -

"இந்த லயன்லே இருக்கிறேனில்ல...அதுனாலே நாலு: முக்கியமான புள்ளிங்களைத் தெரியும்...சொல்லிப் பார்க்க. லாம்! ... . - ..

'நீ சொல்ற புள்ளிகள் எப்படிப்பட்ட வங்களோ?'

"டீஸண்ட் ஆளுங்கதான். பெரிய பெரிய கம்பெனி

மானேஜருங்க...சினிமா ப்ரொட்யூலருங்க... அரசியல் தலைவருங்க... பத்திரிகைக்காரங்க.எல்லாத்திவியும் நமக்கு. வேண்டியவங்க இருக்காங்க! அது சரி..... நீ இன்னா

படிச்சிருக்கே......' -

"தமிழ் இல்க்கியத்திலே எம். ஏ. படிச்சிருக்கேன். அதுக்குக் கம்பெனி வேலை. கிம்பெனி வேலையெல்லாம் தர மாட்டாங்க.தமிழை நட்டமா நிறுத்தப் போறோம் னு, பதவிக்கு வர்ரவங்களையும் நம்பிப் பிரயோசனமில்லே. அவ்ங்க தமிழைத் தான் வாழ வைப்பாங்களே ஒழியத். தமிழ் படிச்சவங்களை வாழ வைக்க மாட்டாங்க'......