உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - நிசப்த சங்கீதம்

னில் அவர்களுக்குப் பிரமாதமான உபசாரம் நடந்தது. மங்காவோடு உடன் வந்திருந்த பாண்டித்துரையையும், கஸ்தூரியையும் வெளியே அமர வைத்துவிட்டு மங்காவை மட்டும் தனியே டெலிஃபோன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

எதிர்ப்புறம் யாரோ லயனில் ஏற்கெனவே பேச்க் காத். திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ரீnவர் தயா ராக எடுத்து மேஜைமேல் வைக்கப்பட்டிருந்தது. - . "பேசுங்கம்மா! உங்களுக்குத்தான்...'-என்று எடுத்து வைத்திருந்த ரீnவரைச் சுட்டிக்காட்டி மரியாதையாக அவளிடம் கூறினார் அழைத்து வந்த போலீஸ் அலுவலர். அவரது பவ்யமும் பணிவும் செயற்கையாக இருந்தன.

ஆருயிர்க் கணவன் முத்துராமலிங்கத்தினிடம் பேச - லாம் என்று ஃபோனை எடுத்தால் எதிர்பாராத அதிர்ச்சி யாக மறு முனையிலிருந்து தந்தையின் குரல் சீறியது.

கோயில்லே தாலி கட்டினது முதல் ரிஜிஸ்திரார் ஆபிஸ்லே கலியாணத்தைப் பதிவு பண்ணினதுவரை எல்லாம் என்னைக் கொலை பண்ணிடுவேன்னு பயமுறுத்தி நடத்தினாங்க. எனக்கு இதிலே சம்மதமே இல்லை. என் விருப்பத்துக்கு எதிரா என்னைப் பலாத்காரமாகக் கடத்திக் இட்டுப் போய்த்தான் இதெல்லாம் நடந்திச்சுன்னு இப்பவே ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திட்டு நேரே இங்கே வந்து சேரு! இல்லாட்டி நீயும் உருப்படமாட்டே உன்னை இழுத்துக் கிட்டுப் போனவனும் உருப்பட மாட்டான். உருப்பட விட மாட்டேன். ஞாபகம் வச்சுக்கோ. கடைசியா எச்சரிக்க வைக்கலாம்ன்னுதான் உன்ன்ைக் கூப்பிட்டனுப்பிச்சேன்.' . நீங்களும் ஒரு மனுஷனா? என்னை ரவை ரவையா - வெட்டினாலும் அது நடக்காது' என்று கூறி எரிச்சலோடு ஃபோனை வைத்தாள் மங்கா. தான் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. முத்துராமலிங்கத்தோடு பேச வேண்டும் என்ற ஆசையோ, சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ தனக்கு