நா. பார்த்தசாரதி 9.3 கறீங்க?-என்று தலைமை ஆசிரியரை நோக்கிக் கேட் டான் சுதர்சனன். ஆனால் தலைமையாசிரியர் இதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் 'நீங்க என்ன சார், கமுக்கமாகக் காதும் காதும் வச்சாப்பில முடிய வேண்டியதை மேலும் சிக்க லானதா ஆக்கிட்டீங்க. ஏதோ நடந்தது நடந்து போச்சு, மறத்துடுங்க - மன்னிச்சிடுங்க'ன்னு எடுத்த எடுப்பில ரெண்டு வார்த்தை பணிவாச் சொல்லியிருந்திங்கன்னா ஜமீன்தார், "சரி! இனிமே இப்படி எதுவும். நான் கேள்விப் படாமே ஒழுங்கா இருங்கன்னு'- மன்னிச்சு அனுப்பிச்சிருப் பாரு, நீங்க என்ன டான்னா ஜமீன்தாரிட்டவே நேரடியாக் கடுமைய்ா மோதிட்டீங்க!' "நான் ஒழுங்கா இருக்கணுமுன்னு எனக்கு உபதேசம் பண்றதுக்கு வாயைத் திறக்கிற யோக்கியதை அவருக்கு இருக்கணும்னா அந்த அளவுக்காவது முதல்லே அவருதான் ஒழுக்கமுள்ளவரா இருக்கணும் இல்லியா? என்று சூடாகத் தலைமை ஆசிரியரிடம் எதிர்த்துக் கேட்டான் சுதர்சனம். - 9 சுதர்சனனின் பேச்சு ஆதர்சபுரம் ஜமீன்தாரை ப் பற்றியதாக இருக்கவே தலைமையாசிரியர் கொஞ்சம் பின் வாங்கினார். நடுத்தெருவில் ஒரு பொது இடத்தில் தனக்குச் சரி என்று படாத ஒரு பெரிய மனிதனைப் பற்றிப் பயப்படாமல் விமர்சிக்கிற தைரியம் சுதர்சனனு க்கு இருந்தது. அதைக் கேட்கிற தைரியம் தலைமையாசிரியர் வாசுதேவனுக்குத்தான் இல்லை. மெல்ல சைக்கிளில் ஏறிக் கொண்டு சரி! அப்புறம் பார்க்கலாம்' என்று சொல்விக் கொண்டே அங்கிருந்து நழுவினார். ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள அல்லது ஒரு முரண்பாட்டைச் சந் திப்பு
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/95
Appearance