உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பொய்ம் முகங்கள் 'பட்டிமண்டபம்தான் கெட்டுக் குட்டிச் சுவராப் போயிடிச்சு கவிதைன்னா உங்களுக்குப் பிடிக்குமே? அவியரங்கத்துக்கு ஏன் போகமாட்டேங்கlங்க'... . . "சாக்கடைக்குப் பக்கத்திலே ஒடற நல்ல தண்ணியும் கேட்டுப் போறாப்பிலே கவியரங்கமும் கெட்டுப் போச்சு. தலைவரையும், அவையோரையும் நூறு வரி பாடிப்பிட்டுத் தலைப்பை நாலு வரி பாடி ஏனோதானோன்னு முடிக்கிற கவியரங்கம்தானே இப்ப அதிகம்? இவ்வூரில் இந்நாளில் எனைப் பாட வரும்படி'க்குச் சொன்னார்கள் து பாடறப்போ "வரும்படி என்கிற வார்த்தையை இரண்டு தரம் அழுத்திச் சொன்னால் கூட்டத்திலே அந்தச் சிலேடைக் ஆக் கை தட்டுவாங்க. அப்படி ஒரு கவியரங்கத்திலே கைதட்டு வாங்கிட்டா அப்புறம் ஒவ்வொரு கவியரங்கத் திலேயும் அது மாதிரி நாலு சிலேடை போடறதுக்குத் தான் தோணும். இது மாமூலாகப் போனபின் இன்னார். பாடினாங்கன்னா சிலேடை வரும்னு ஜனங்களே எதிர் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ஜனங்கள் திட்டமிட்டு என்னென்ன எதிர்பார்க்கிறார்களோ அதில் அடங்கி நின்று அதை மட்டும் திருப்திப்படுத்தி விடுவதற்குப் பழகிக் கொள் கிற ஒரு கலைஞன் மெல்ல மெல்லப் பிறருடைய எதிர் பார்த்தல்களுக்கு இரையாகிவிடுகிறான். அவனையறியா மலே அபிப்பிராய அடிமைத்தனத்தில் நிரந்தரமாக அவன் சிக்கிவிடுகிறான். பல கவியரங்கக் கவிஞர்கள் சீப் சிலேடை, வல்கர் வார்த்தையலங்காரம் இவைகளோடு நின்றுவிடுகிறார்கள். அதனால்தான் வரவர கவியரங்கம் என்றாலும், பயமாயிருக்கிறது. 'கற்புக்குப் பிழைத்து வந்தர்ள் (கல்+புக்கு) கற்புக்குப் பங்கமானாள்’னு நம்ம பிச்சாண்டியாபிள்ளை அகலிகையைப் பத்தி ஒரு ஸ்டாக் சிலேடை வச்சிருக்காரில்ல. அதுமாதிரித்தான்." * - 5 நான்கூட நீங்க சொல்ற மாதிரிப் போன மாசம் நம்மூர்வியே இங்கே ஒரு கவியரங்கம் கேட்டேன். காதல் பித்தன்னு ஒருத்தர் பாடினாரு