25
கலகம் செய்வதற்கென்று கூட்டத்தில் ஊடுருவியிருந்த, வர்களே மிகவும் தந்திரமாகச் செயல்பட்டிருந்தார்கள். அவர்கள் மந்திரி எஸ். கே. சி. நாதனால் ஏவப்பட்டு வந்தி ருந்தாலும் சிவகாமிநாதனின் ஆதரவாளர்போல் பாவித்து மந்திரியின் மகளாகிய மங்காவை எதிர்த்துக் கலகம் புரிவ தாக நடித்தார்கள். கூட்டத்தினரும் முதலில் அதை அப்படித்தான் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தது.
தியாகி சிவகாமிநாதன் ஒருவருக்கு மட்டுமே அதில் ஏதோ சூது இருக்கவேண்டும் என்ற சந்தேகம் வந்தது. தன் தரப்பு ஆட்களில் யாரும் சக்காரணத்தை முன்னிட்டும் இப்படிப்பட்ட வன்முறைகளில் இறங்கக் கூடியவர்கள் இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மந்திரியின் மகளாகிய மங்கா தங்கள் மேடையில் பேசுவது பிடிக்க வில்லை என்றால் அதைத் தன்னிடம் வந்து விவாதித்து. ஆட்சேபிப்பார்களேயொழிய இப்படிச் சோடாபுட்டியை வீசிக் கொண்டு தன் தரப்பு ஆட்கள் குதிக்க மாட்டார்கள் என்று அவர் அறிவார். எனவேதான் யாரோ மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டுத் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்று புரிந்து கொண்டு உஷாரானார் அவர். -
ஆனால் அவர் உஷாராவதற்குள் காரியம் கைமீறிப் போய்விட்டது. கலகம் செய்யக் கிளம்பியவர்கள் வெளியி லிருந்து வந்த எதிரிகள் என்று தெரிந்திருந்தால் சிவகாமி நாதனின் ஆதரவாளர்களும் மக்களும் அவர்களை அடக்கி, ஒடுக்கியிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு முதலில் அது. தெரிந்திருக்கவில்லை. ... . . . . . ‘. . . . - அங்கே அப்போது கலகம் செய்தவர்கள் சிவகாமி நாதன் வாழ்க!" என்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம் ஓங்குக!' என்றும் அவர்களுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டே எதிரான காரியங்களில் இறங்கி மங்காவை,