84 நிசப்த சங்கீதம்
"அவன்தான் பேட்டை ரவுடி எந்தக் கூட்டத்திலே யோர் வம்புக்கும். சண்டைக்கும் கிடைப்பான்னே தேடிக் கிட்டு அலையறவன். நீ படிச்ச பிள்ளையாத் தெரியறே. நீயுமா பதிலுக்கு அவனைப் போய் அடிக்கனும்? நாய் கடிச்சா பதிலுக்கா நாம கடிக்கிறது...?' -
"சும்மா வலுச்சண்டைக்குப் போறது காட்டு மிராண்டித்தனம்! அதே சமயத்திலே வந்த சண்டையை விடறதும் கோழைத்தனம்.நாய் நம்மைக் காரண மில்லாமக் கடிக்க வராது. ஆனால், சில மனு ஷங்க அப்படி யில்லை. அதினாலே பதிலுக்குக் கடிச்சாத்தான் அவங் களுக்குப் புத்திவரும்,'
முத்துராமலிங்கத்தின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு பில்ர் வாய் அடைத்தது. இத்தகைய சிக்கலான சமயங்களில் தயங்கித் தயங்கி வருகிறாற்போல அவன் வார்த்தைகள் இல்லை. தீர்மானமாகவும், உறுதியாகவும் இருந்தன. ஒரு முதியவர் அவனுக்கு அறிவுரை கூறலானார். 'நீகூட அப்படிப் பேசியிருக்கக் கூடாதுப்பா! சிலதை நினைக்கலாம். பேசப்பிடாது. வேறு சிலதைப் பேச லாம். நினைக்கப்பிடாது." .
ஒரு விஷயத்தை பகிரங்கமா ஒருத்தன் அளவு கடந்து பாராட்டலாம்னா-அதே விஷயத்தை இன்னொ ருத்த்ன் விமர்சிப்பான்-அப்படி விமரிசிச்சா அதைப் பொறுத்துக்கனும்கிற பொது நாகரிகம் இருக்கணும்.'
- o -இப்படிப்பேச்சு வளர்ந்ததே ஒழிய அவன் கூறியது என்ன் என்பதை யாருமே மறுபடி விசாரிக்கவில்லை.
நம்ப ஆளு மேலே ஒருத்தன் கையை வைச்சிட்டுத் தப்பறதாவது கொலைகாரன் பேட்டை சின்னியின்னா எதிர்த்து வர்றவன் மரியாதையா ஒதுங்கிடனும்' என்றான் உடனிருந்த சாராயம். முத்துராமலிங்கம் வழி தவறிப் போய்த் தற்செயலாகக் கிருஷ்ணாம்பேட்டைச் சுடு காட்டில் சந்தித்தவர்கள் மிகச் சில விநாடிகளிலேயே