உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 139

இன்று நாம் புதிய குருட்சேத்திரத்தில் நிற்கிறோம். இலஞ்ச ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் செய்கிறவர், கள் நமக்கு மிகவும் வேண்டிவர்கள் என்று தயங்கி உணர்வு தளர்ந்து நம் கையிலுள்ள படைகளைக் கீழே போட்டுவிட்டு நின்று விடுகிறாம். அப்போது நம்மைத் தைரியப்படுத்தி எழுப்பி நிறுத்தி 'வில்லினை எடடா கையில் வில்லினை எடடா-அந்தப் புல்லியர் கூட்டத்தினைப் பூழ்தி செய் திடடா!' என்று வில்லை எடுத்துக் கொடுத்து ஊக்கப் படுத்த ஒரு துணிவான கீதாசாரியன் நமக்குத் தேவையா யிருக்கிறான். இன்று இந்தத் தமிழ்நாட்டில் எனக்கும் உங்களுக்கும் அப்படித் துணிவூட்டக்கூடிய ஒரே தலைவர் தம்முடைய சிவகாமிநாதன் அவர்கள்தான்.' . . . . .

இந்த வாக்கியத்தைப் பேசியபடியே மங்கா நின்றிருந்த திசையில் பார்வையை ஒடவிட்டான் முத்துராமலிங்கம். அவள் அதே பழைய உற்சாகத்தோடுதான் கேட்டுக் கொண்டிருந்தாள். - * ... -

'முன்பு வெள்ளைக்காரர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். இன்று நம்மவர்களே நம்மை ஆள்வதன் மூலம் சுரண்டப் பார்க்கிறார்கள். சுரண்டு. கிறவன் விதேசியாயிருந்தால் என்ன? சுதேசியாயிருந்தால் என்ன? . சுரண்டல் இருக்கிறவரையில் என்றும் நாம் பெருமைப்பட முடியாது. சுரண்டல் அடிமைத்தனத்தின் பேரால் நடந்தால் என்ன? ஜனநாயகத்தின் பேரால் நடந் தால் என்ன? சுரண்டல் என்பது ஒரு தேசத்தின் ஆரோக்கி யத்தையே நலியச் செய்கிறது. சிலர் கட்சிகளின் பேரால் சுரண்டுகிறார்கள். வேறு சிலர் மந்திரி பதவியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தித் தங்களைக் காத்துக்கொண்டு சுரண்டுகிறார்கள், . . . . . . . . . . . . . o

மறுபடியும் மங்கா நின்று கொண்டிருந்த திசையில், பார்வையை மிக அவசரமாக ஒட் விட்டான் முத்துராம. லிங்கம். சிலர் மந்திரி பதவியின் பேரால் சுரண்டுகிறார் கள்' என்ற வாக்கியத்திற்காக அவளும் அவளுடைய