உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - - நிசப்த சங்கிதம்

தியேட்டர் அருகில் இறங்கி நடந்துபோய் ஜெமினி வளைவு திரும்பியபோதே அமெரிக்கன் செண்டர் வாசலிலிருந்து அவள் டிரைவ்’ இன்னை நோக்கிச் செல்வது தெரிந்தது.

சாலையில் பட்டுப்பூச்சியாய் நடந்து கொண்டிருந்தாள் அவள். அவன் அருகே போய்ச் சேர்ந்துகொண்டான். "ஹலோ"க்களும் மெல்லிய புன்முறுவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

'வர மாட்டீங்களோன்னு நெனைச்சேன்'

வேலை ஒண்னுமில்லே, அவுட்டோர் கேன்ஸல் ஆயிடிச்சு. நேத்து நீ கொடுத்த நன்கொடைக்கு ஸ்பெஷலா நன்றிசொல்லனும்னு தோணிச்சு. வந்தேன்.'"

"கைவளை எங்கேன்னு அம்மா காலையிலே கேட் . டாங்க. பொய்யா என்னமோ கதை சொல்லிச் சமாளிச்சேன். ' - -

'குடுத்திட்டமேன்னு வருத்தமா இருந்தாக் குடுத் திருக்கவே வேண்டாமே?' - -

வருத்தமோ பயமோ, இருந்தா அந்தக் கூட்டத்துக்கே நான் வந்திருக்க முடியாது. நான் யாருன்னு தெரிஞ்ச வங்க கூட அங்கே கூட்டத்திலே ரெண்டொருத்தர் இருந்தாங்க. அவங்களுக்குள்ளே நான் அங்கே வந்து கேட்டுக்கிட்டிருக் கிறதைப்பத்திப் பேசிக்கிட்டாங்க. உடனே அதுக்காக . நான் பயந்து கூசி ஒடிப் போயிடலே...' --

"உன்னோட அந்தத் துணிச்சல்தான் என்னை இன்னிக்கி இங்கே தேடி வரவழைச்சிருக்கு மங்கா

"உள்ளதை உள்ளபடியே சொல்லனுமானா பர்மிங் ஹாம் போறதுக்குக்கூட எனக்குப் பிரியமில்லே. சீக்கிரம் புறப்படப்பாரு...நான் மினிஸ்டரா இருக்கற பீரியடிலேயே நீ போனாத்தான் பலதுக்கும் வசதி'-ன்னு அப்பாதான் வற்புறுத்தறாரு,