உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பொப்ம் முகங்கள் என்னமோ ஏதோன்னு நினைக்காதீங்க. ஏதுடா இப்படிச் சிவப்புத் தலைப்பாகையைக் கட்டிக்கிட்டு வந்து இறுக்கன் மாதிரிப் பேசறானேன்னு உங்களுக்குத் தோன லாம். இன்னிக்கு ஐ.ஏ.எஸ்.ஸா வேலை பார்க்கிற பல பேரு நம்ம தயவிலே யூனிவர்ஸிடி பரீட்சை பாஸ் பண்ணிப் போனவங்க. நம்ம மேலே விசுவாசம் உள்ள வங்க. நாம சொல்லியனுப்பிச்சோம்னா எதையும் தட்டாமச் செய்து கொடுக்கிறவங்க." - சுதர்சனன் தலையை ஆட்டினான். அவனுக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரிய வில்லை. தெரிந்த உண்மைகள் பல பொய்களின் முக விலாசங்களைத் தெரிவிக்கக் கூடியவனவாக இருந்தன. உண்மைகளைப் புரட்டிப் பார். அவற்றின் மறுபுறத்தில் பொய்களின் முகங்கள் தெரியும்’ என்பது போன்ற பல உண்மைகளை விவரித்துக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சித்ம்பரநாதன். - போர்ட் ஆஃப் ஸ்டடீஸ், செனட், சிண்டிகேட், அகடமிக் கவுன்ஸில் எல்லாத்திவியுமே நமக்குச் செல்வாக்கு உண்டுங்க. ஒரு புஸ்தகத்தைப் பாடமா வச்சு இருபத்தை யாயிரம், முப்பதாயிரம் பிரதிகள் நிச்சயமா உடனே விற்க லாம்கிற வசதி இதிலே மட்டும்தர்ன் உண்டுங்கிறதாலே பல பேரு தங்கள் புஸ்தகம் பாடமா வரணும்னு ஆசைப்பட றாங்க. போர்டுலே எதையும் டிஸைட் பண்ற முதலை’ங்க நாலே நாலு இருக்கு. தலைக்கு ஐநூறுக்குக் குறையாமே காதும் காதும் வச்சாப்பிலே கவர்லே வச்சுத் தள்ளிட்டா அப்புறம் நீங்க சொல்ற புஸ்தகத்தைப் பாடமா வச்சுக் கலாம். இதுணோட உள் விவகாரமெல்லாம் நமக்குத் தலைகீழ்ப் பாடம். சிண்டிகேட்லே ரொம்ப காலம் இருந்: திருக்கேன் பாருங்க! எல்லாரையும் எல்லாத்தையும் நல்லாத் தெரியும். போன வருஷம் நம்ம பலவேசம் பிள்ளை, எழுதிய பாண்டிய நாட்டுப் பலகாரங்கள்’ங்கிற புஸ்தகத்தை பி. ஏ. பட்டப் படிப்புக்கு வைக்கணும்னு யார்