உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 141

இப்படித் தொடங்கியவருடைய பேச்சில் சூடு ஏறிக் கொண்டே போய் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு முடிந்தது. கூட்டம் முடியும் போது இரவு பதினொன்றே முக்கால் மணி. மக்கள் ஆர்வமிகுதியினால் தியாகி சிவகாமி நாதனின் வழக்கு நிதிக்கு மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், செயின்கள் என்று கழற்றிக் கொடுத்திருந்தனர். சிவகாமி நாதன் பேசத் தொடங்கிய பதினைந்து நிமிஷங்கள் கழித்து இளைஞர்கள் வசூலுக்காகத் துண்டுகளுடன் கூட்டத்தில் இறங்கினார்கள். அப்படி வசூலுக்கு இறங்கிய இளைஞர் களில் முதல் ஆளாக முத்துராமலிங்கம் இருந்தான்.

அந்தக் கூட்டத்தில் அப்படி வசூலுக்காகப் புகுந்து புறப்பட்டபோது அவனுக்கு அங்கே ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. மங்கா தன் கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் இரண்டையும் கழற்றி அவன் விரித்து ஏந்தி வந்த துண்டில் போட்டாள். அவளோடு கூட வந்திருந்த மற்றோர் இளம் பெண் ஒரு முழுப் பத்துரூபாய் நோட்டைப் போட்டாள். முத்துராமலிங்கம் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, 'என் கண்களையே நம்பமுடிய லியே?’ என்று மங்காவைக் கேட்டான். அவள் பதிலுக்குக் கேட்டாள் : . , -

"தாங்கள் நம்ப முடிந்தவை மட்டும்தான் நடக்க் முடியும் என்று நினைப்பவர்கள்தான் இப்படி எல்லாம்

ஆச்சரியப்படுவார்கள்.' х r - "அப்பாவை எதிர்த்துப் பேசுகிறவர்களுக்கு மகள் நன் கொடை கொடுத்தால் ஆச்சரிபப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்' x ... *

நீங்களே உங்களுடைய . பேச்சில் சொன்ன குருட் சேத்திர உதாரணப்படி இதில் ஆச்சரியப்பட எதுவு

கூட்டத்துக்கு நடுவே விவாதத்தையும் உரையாடலை யம் வளர்த்த விரும்பாமல் மேலே வசூலுக்காக நகர்ந்தான் முத்துராமலிங்கம். - . . .