உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி. 器23

காலத்திலே மட்டும் கண்டிப்பா எங்கூடத்தான் நீங்க இருந்: தாகணும். கஷ்டம் வரப்போ விட்டுடறதும், வசதி வர்ரப் போ அரவணைச்சுக்கறதும்தான் இந்தக் காலத்து நடை முறையாயிருக்கு. ஆனா நான் இந்தக் காலத்து மனுசன் இல்லே, உங்க கஷ்டத்திலே எனக்குப் பங்கு கொடுங்க என் கஷ்ட நஷ்டங்களில் நீங்களும் பங்கெடுத்துக்குங்க... வீணா மனசு குழம்பாதீங்க...' .

ஐயா! நீங்க ரொம்பப் பாரத்தைச் சுமக்கனுமேன் னு தான்...?' . . . . . .

"சத்திய விவசாயத்தில் பாரம் சுமந்துதானப்பா ஆகணும். முடிகிறவரை சுமப்போமே...?' - * • .

அவனுக்கும் அவருக்கும் இடையே நடந்த இந்த உரை யாடல் மங்காவுக்குத் தெரியாது. அவருடைய எல்லையற்ற பெருந்தன்மையை அவன் வியந்தான். இப்படி ஆலமரம் போல் பலரை நிழலில் அமர்த்திக் குளிர்விக்கும் பண்புள்ள மனிதர்கள் தான் தலைவர்களாக இருக்கவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தங்கள் நிழலில் புதிதாக யாருமே அமரக்கூடாது என்று நினைக்கிற சுயநலமிகளே இந்தத் தலைமுறையில் தலைவர்களாக வந்திருக்கிறார்களே என்று ஒப்பிட்டு எண்ணினான் முத்துராமலிங்கம். -

அன்றிலிருந்து அவருடைய இயக்க வேலைகள், தியாகி பின் குரல் பத்திரிகைப் பணிகள், அச்சக அலுவல்கள் அனைத்திலும் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்தார்கள். மங்காவும் அவனும். - - - - . . ம்ந்திரி எஸ். கே. சி. நாதனுக்கு வேண்டிய தரப்பு மஞ்சள் பத்திரிகைகள் சில அவர்கள் திருமணத்தைப் பற்றி யும் அதற்குத் தியாகி சிவகாமிநாதன் முன் நின்று உதவியதைப் பற்றியும் தாறுமாறாக எழுதியிருந்தன. 'கடத்தல் கல்யாணத்துக்குத் தலைமை வகித்த தியாகி என்றும், தியாகிக்கு புதிய உத்தியோகம் என்றும் தலைப்புக்கள் போட்டு அவரைக் கிண்டல் செய்திருந்தன. மங்காவின் தந்தையோ இந்தத் திருமணத்தை எதிர்க்கவும்: