நா. பார்த்தசாரதி 19 5 "ஏதேது? நீங்களே. எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணுர விங்க போல இருக்கே...?" பிரச்சாரம் ஒண்னுமில்லே. உள்ளதைத்தான் சொன் னேன்'- - "எல்லா ஊழலும் எல்லா அறியாமையும் கல்வியாலே தான் போகணும்னு சொல்லுவாங்க. ஆனால் கல்வித் துறையிலேயே இத்தனை ஊழலையும் ஒட்டைகளையும் வைத்துக் கொண்டு அப்புறம் இந்த நாட்டில் வேற எதைத் தான் சீர்திருத்த முடியும்?'-சுதர்சனன் இப்படிக் கேட்ட தற்குச் சிண்டிகேட் சிதம்பர நாதனிடமிருந்து உடனே பதில் வந்தது. - 'எதுக்காகச் சீர்திருத்தணும்னேன்? சீர்திருத்தணும்னு வரிந்து கட்டிக்கொண்டு புறப்படறதுதான் பைத்தியக்காரத் தனம். எவனாலேயும் எதையும் முழுக்கச் சீர்திருத்திட முடியாது இந்த நாட்டிலே. பிரிட்டிஷ்காரன்தான் போயிட்டானே ஒழியக் கல்வி இலாகாவிலே இன்னும் அதே மனப்பான்மையுள்ள வங்கதான் இருக்காங்க. எதையும் நீங்க மாத்திப்பிட முடியாதுன்னேன்.' - "இன்னும் பத்து வருசத்துக்குப் பள்ளிக் கூடங்களை யும் கல்லூரிகளையும் இழுத்து மூடிவிட்டு உடலுழைப்பைக் கட்டாயமாக்க வேண்டும். மனிதத் தன்மையையும்,யோக்கி யதையையும், நாணயத்தையும், ஒழுக்கத்தையும் சுய கெளரவத்தையும் உழைப்பை மையமாக வைத்துக் கற்றுக் கொடுக்கவேண்டும். இல்லாட்டி இந்த தேசம் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிக் கூட்டமாகப் போய்விடும்'. "கதாசனன் சார் இப்பல்லாம் வர வர இந்த மாதிரிப் புரட்சியாவே பேச ஆரம்பிச்சிருக்கிறதைப் பார்த்தாப் பயமாயிருக்கு. பயமே பாவங்களுக்கெல்லாம் தந்தை என்று மகாகவி பாரதியார் சொல்லியிருக்காரு. தெரியுமா?" . . . . . . . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/197
Appearance