உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8 நிசப்த சங்கீதம்

தவிப்பையும் விட முடியாமல் அவர் திணறுவது முத்து 'ராமலிங்கத்துக்குப் புரிந்தது. அவரை அப்படியே இன்னும் .சிறிது நேரம் தவிக்க விடலாமென்றும் முத்துராமலிங்கத் துக்குத் தோன்றியது. ஆனால் அடுத்தகணமே நீங்க இன்னாரோட சன்தானே? என்று தப்புத் தப்பான பெயர் களைக் கூறிக்கேட்டு அவனைத் திணற அடித்தார் அவர். முத்துராமலிங்கம் அவர் மேலும் பல பொய்யான தகப்பனார்களைத் தனக்குக் கற்பிப்பதற்குள் தன்னுடைய -நிஜத் தகப்பனாரின் பெயரை விரைந்து சொல்லிவிட விரும்பி, எங்கப்பா பேரு பசுங்கிளித்தேவர்-என்று கூறி விட்டான், -

எவ்வளவுதான் நாகரிகமாக உடையணிந்து நாசூக் காகப் பழகினாலும் ஒவ்வொரு மனிதனிலிருந்தும் ஒரு காட்டுமிராண்டி ஏதாவது ஒரு சமயத்தில் மெல்லத் தலையைத் தலையை நீட்டுகிறான். அதில் ஒன்றுதான் பிறரது ஜாதியைப் பற்றி அறிய விரும்பும் சமயமும் என்று புரிந்தது.

வைரவன் மறுநாள் தன்னை வந்து பார்க்குமாறு முத்து ராமலிங்கத்திடம் கூறினார். பின் உட்புறம் ஒர் அறை

வாசலுக்குப் போய் வாயிற்படியில் நின்றவண்ணமே,

"இந்தா உன் மாமூலை வாங்கிக்க

என்று ருபாய் நோட்டுக்கள்ை நீட்டினார். உள்ளே இருந்து தோள் புடைவை முற்றிலும் சரிய ஒர் இளம் பெண் வந்து அதை வாங்கிக்கொண்டு போனான் " -

. "வைரவன் சார் நம்ம கஷ்டமர். என்றான் சின்னி. அவன் அப்படிக் கூறியதை அவர் அவ்வளவாக ரசிக்க வில்லை என்று பட்டது. அவர் புறப்பட்டுப் போனபின் "இந்த மாதிரி வந்த எடத்துலே சிபாரிசு சொன்னா எப்படி? அவருக்கும் இது பிடிக்கலேன்னு நினைக்கிறேன்". என்றான் முத்துராமலிங்கம். சின்னி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தான். 3. -