உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பொய்ம் முகங்கள் 'படுக்கை அறைப் பாவை, கட்டிலில் கட்டழகி, தொட் :டால் துவளும் சுந்தரி முதலிய சுவையான தமிழ்க் கதை களின் ஆசிரியையாகிய குமாரி. சுகுணவல்லியின் புதிய கதை தலையணை நாயகியின் தனியறை லீலைகள் என்று அழைப்பிதழ் தொடங்கியது. சுதர்சனன் கேட்டான்: 'படுக்கை அறை, கட்டில், இந்த இடங்களைத் தவிர வேறே எங்கேயும் நம்ம பெண்களுக்கு வேலையே இல்லையா? உங்க கதைத் தலைப்புக்களைப் பார்த்தா நம்ம பெண்கள் இருபத்து நாலு மணி நேரமும் கட்டில், படுக்கை அறை, தலையணைகளிலேயே வாழ்க்கையைக் கழிக்கிற மாதிரியில்லே தோணுது?" - 'ஸேல்ஸ் நல்லா ஆகணும்னா அப்படி எல்லாம்தான் தலைப்பு போட்டாகணும் சார்! அப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டா?'-என்று மெதுவாகச் சொல் லி க் கொண்டே பாதியில் நழுவினார் அந்தக் கதாசிரியர். "இந்த மாதிரித் தலைப்புப் போட்டுப் புத்தகம் விற்கிற தைவிட உன் நண்பர் இன்னும் சில நாட்களில் பெண் களையே நேரடியாக விற்கிற காரியம் அதிக லாபமான துன்னு அதைத் தொடங்கினாலும் தொடங்கலாம் ரகு!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சுதர்சனன். அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா ! இந்த எழுத் தாளர் சோமையா ஆரம்ப காலத்தில்ே நம்ம ஐயாவோட இயக்கத்திலே இருந்தவர். கொள்கை வழிப் பிரிந்து கூட்ட வழி இணைந்த தத்துவத்தை ஒப்புக் கொண்டவர். பின் னாலே இப்போ பிழைப்புக்காக இதெல்லாம் எழுதறாரு, ஆனாலும் எங்களுக்குள்ளே பழைய பாசம் இன்னும் விடலே?" - 'பழைய பாசத்தாலேதான் உங்க ஐயா இதுக்குத் தலைமை தாங்கி வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறா ராக்கும்? இந்த மாதிரிப் புத்தகத்தை எல்லாம் படிச் சுப் பார்க்க உங்க.ஐயாவுக்கு நேரமிருக்கா?"