நா. பார்த்தசாரதி 225 குறையாமல் ஆகிவிடும் என்று தோன்றினாலும் முயன்று: பார்க்கலாம் என எண்ணினான் அவன். . தபாலில் விண்ணப்பத்தை அனுப்புவதைவிட நேரில் போயே பார்த்து விடுவது நல்லதென்று தோன்றியது. விண்ணப்பத்தை எழுதி எடுத்துக்கொண்டு தன்னுடைய சான்றிதழ்கள். பட்டம், சர்வீஸ் ரிஜிஸ்தர் எல்லாவற். றோடும் புறப்பட்டான் சுதர்சனன். பஸ்ஸில் அந்த இடத்திற்குப் போய்ச் சேருவதற்கே ஒன் றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. காலை பத்து மணிக்கு மேல் அவன் புறப்பட்டிருந்ததனால் சரியாகப் பகல் உணவிற்கான மதிய இடைவேளை நேரத்தில் அவன் அங்கே போய்ச் சேர்ந்திருந்தான், ஆசிரியர்கள் ஒய்வு அறையில் விசாரித்ததில் தலைமையாசிரியரை இரண்டு. மணிக்குமேல் தான் பார்க்க முடியுமென்று தெரிந்தது. அப்பள்ளியின் தலைமையாசிரியர் அறையும் ஆசிரியர்கள் ஒய்வறைக்குப் பக்கத்திலேயேதான் இருந்தது. . w டேவிட்கந்தையா என்று ஒரு டிராயிங் மாஸ்டர் தாமாகவே சுதர்சனனுக்கு அறிமுகமானார். சுதர்சனனிடம் பேச்சுக் கொடுத்து அவன் வந்திருக்கும் காரியத்தை அறிந்து கொண்டார். அவரே முன்வந்து சொன்னார்: r
- இந்தப் பள்ளிக்கூடம் செங்குந்தர் மேனேஜ், மெண்ட்லே இருக்குது. பெரும்பாலும் அவுங்க காஸ்ட் பிப்பிளைத்தான் ப்ரெஃபர் பண்ணுவாங்க. டிராயிங் மாஸ்டருக்கு இதுவரை அவுங்க காஸ்ட் கேண்டிடேட் யாரும் அப்ளை பண்ணாததாலே தான் நானே காலந்தள்ள முடியுது. அவுங்க காஸ்ட்டிராயிங் மாஸ்டர் கிடைச்சிட்டா என்னையே தள்ளிவுட்டுடுவாங்க சார்."
சாதி மதபேதமற்ற சமூகத்தைப் படைக்கணும்னு எல்லா அரசாங்கங்களும் மாத்தி மாத்தி அறிக்கை விடற: லட்சணம் இதுதானா? இதுக்கு அவனவன் அவனோட ஜாதியை ஆதரிக்கலாம்னு ஒரு சட்டம பண்ணி வச்சுக்க sorrGud?* * * . -: . . - .