72 பொய்ம்முகங்கள் அப்பேர்து தான் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற உணர்வு ஒவ்வொரு சுயமரியாதை உள்ள மனிதனுக்கும் உண்டாகிறது. தான் மட்டும் சட்டங்களுக்குள் அடைக்கப். படுவதை யாரும் விரும்புவதில்லை. - சுதர்சனன் எந்த மூலையிலிருந்து வாழ்வைத் தொடங் கினானோ அதை நினைவூட்டுவதன் மூலமே அவனை மறுபடி அங்கே தள்ளி விட்டுவிட முயன்று கொண்டிருந்: தார் தலைமையாசிரியர் வாசுதேவன். بر - பிச்சாண்டியா பிள்ளை வயது மூத்த தலைமைத். தமிழாசிரியராக இருந்தும் தம்மிடம் காட்டுகிற பணிவை. யும் விநயத்தையும் முந்தாநாள் வேலைக்கு வந்த புதிய இளம் வயதுத் தமிழாசிரியனான சுதர்சனன் காட்ட வில்லையே என்பதுதான் தலைமையாசிரியரின் எரிச்சலுக்கு. எல்லாம் காரணமாக இருந்தது. - பிச்சாண்டியா பிள்ளை முந்திய தலைமுறைத் தமிழா சிரியர்களுக்கும், சுதர்சனன் அதிகத் தன்மான உணர்வுள்ள இந்தத் தலைமுறைத் தமிழாசிரியர்களுக்கும் பிரதிநிதித் துவம் வகித்தார்கள். வாசுதேவன் தோற்றம், மனப் பான்மை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றினாலும் முந்திய தலைமுறை மனிதர். அவருக்கு இந்தத் தலைமுறையின் கய உணர்வுகள், சுதந்திர மனப்பான்மைகள், கட்டுப்படாமை, ஆணவம் எல்லாமே புரியவில்லை. புரிந்து கொள்ளவும் அவர் தயாராயில்லை. தமக்குப் புரிந்தபடி புரிந்தவிதத்தில் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் அவர். அப்ப்டி இல்லாதவர்கள் யார் யாரோ அவர்களை எல்லாம் தம் எதிரிகளாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டார். சுதர்ச னனின் மேலும் இப்படி ஒரு ப்ரஜிடீஸ் அவர் மனத்தில் உள்ளுற ஏற்பட்டு மெல்ல மெல்ல வளரத் தொடங்கி, விட்டது. . இப்படி ஒரு வெறுப்புக் கால்கொண்டதன் விளைவு களையும் அங்கங்கே அவர் காண்பித்துக் கொண்டிருந் தார். திருக்குறள் மன்ற ஆண்டு விழா முடிந்த சூட்டோடு
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/74
Appearance