நா. பார்த்தசாரதி 105
"நல்லா வச்சிருக்காரில்லே...? நடுப்பெற வேற
ஒண்ணு ஊடாடிச்சுன்னியே...? இப்ப அதெல்லாம் இல்லியே தங்கச்சி..?' ه . . . . . . . * -
அவளும்தான் குலுக்கி மினுக்கிப் பார்த்தா... அவளாலே இவரைக் கவர முடியலே அண்ணே! என்று கர்வமும் கம்பீரமும் நிறைந்து மிளிரும் ஓர் அழகிய புன்னகையை உதிர்த்தாள் அவள். -
உன்னை மாதிரி வருமா தங்கச்சி' முத்துராமலிங்கத் துக்குத் தெரியும்படி கூச்சமோ தயக்கமோ இன்றி இதைச் சின்னியால் விசாரிக்க முடிந்தது. அவளால் பதில் சொல்ல வும் முடிந்தது. சினிமா உலகின் அதிக வெளிச்சம் பழகிப் பழகி அவர்களுக்குக் கூச்சமே மரத்துப் போயிருக்குமோ
என்று எண்ணினான் முத்துராமலிங்கம்.
இப்படி உறவுகள் சினிமா உலகின் பை-புராடக்டா அதாவது துணை உற்பத்தியா-அல்லது சினிமா உலகமே இப்படி உறவுகளின் துணை உற்பத்தியா என்று அந்த விநாடியில் சந்தேகமாயிருந்த்து அவனுக்கு. பெண்ணின் கவர்ச்சி அல்லது பணத்தின் கவ்ர்ச்சிதான் அந்த உலகை நடத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. அந்தக் கவர்ச்சி களின் மோதல்களுக்கு நடுவே இயல்பான திறமையுள்ள சில நல்ல கலைஞர்கள் சிக்கிக் கொண்டிருப்பதும் புரிந்தது.
பையன் ட்ரேயில் கொண்டு வந்த காபியைச் சின்னிக் கும், முத்துராமலிங்கத்துக்கும் தானே எடுத்து வழங்கினாள் ஜெகஜோதி, அவளது அந்தச் செயலில் விநயமும் குழைவும் தெரிந்தன. தொந்தியும் தொப்பையுமான உருவத்துக்குப் பொருத்தமில்லாமல் டி ஷர்ட் பேண்ட் அணிந்த ஒரு நடுத்தர வயதுக் கருப்புக் கண்ணாடி ஆசாமி சிகரெட் புகைத்தபடி ஷெட்டிலிருந்து வெளியே வந்தார். . கூடவே கையில் வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் சிகரெட் டப்பாவுமாக ஒரு லைட்பாயும் உடன் வந்தான்.