உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 129 நீ போயிட்டுவா போதும் நான் வரலே, ரயில் பிர யாணம் ஆளை அசத்திவிட்டது. ஒரே களைப்பா இருக்கு" உடம்பை அடிச்சிப் போட்ட மாதிரி வலி "அதெல்லாம் முடியாது! நீயும் கண்டிப்பா வந்தா கனும், போற வழியிலே ஜாம்பஜார் முனையிலே நீயும் ஒரு. மாலையை வாங்கிக்கலாம். தலைவரை இப்பவே பார்க் கிறது உன் ஃப்யூச்சருக்கு நல்லது'- - - நண்பன் இவ்வளவு வற்புறுத்தியபின் சுதர்சனனால் மறுக்க முடியவில்லை. "கலம்பகம் டுட்டோரியல் காலேஜ்'-- என்ற பெரிய விளம்பரப் பலகையோடு கூடிய அந்த மாடிக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதி மூன்று நான்கு வகுப்பறைகளாகத் தடுக்கப்பட்டிருந்தது. மாடியில் கல்லூரி பிரின்ஸிபால் ரகுராஜனின் குடியிருப்புப் பகுதி இருந்தது, ஆட்டோ: வை. டிஸ்போஸ் செய்துவிட்டுப் பெட்டி படுக்கையை மாடியில் போட்டுக் கதவை அடைத்துக்கொண்டு சுதர்சன்னும் அவர்" களோடு புறப்பட்டான். முகம் கழுவி உட்ைமாற்றிக் கொள்ளக்கூட நண்பன் ரகு அவகாசமளிக்கவில்லை. அவசரப்படுத்தினான். "இன்னிக்கு நீ வந்ததிலே ரொம்பச் சந்தோஷம் சும்மா வாப்பா! நம் தலைவரே ஏழை எளியவர்களோட பிரதிநிதிதான். தளுக்கு மினுக்கெல்லாம். அவருக்கே பிடிக்காது. போற போக்கிலேயே ரத்னா கேஃப்லே ஒரு காப்பியைக் குடிச்சிட்டுப் போயிடலாம்..." "தலைவர் கேக் வெட்டறத்துக்குள்ளாரப் போய்ச் சேரனும் தலைவர் கையாலே முதல் கேக் துண்டு நம்ம ரகுராஜனுக்குத் தான்னு நேத்தே சொல்லிப் போட்டாரு. நாம லேட்டாப் போய்ச் சேர்ந்தா அது நம்ம குத்தம் தான்...' என்று உடனிருந்த மற்றொருவர் துரிதப். படுத்தினார். .

இவர் சிந்தாதரிப்பேட்டைச் செயல்வீரர் பொன் மணி. அவர் புதுப்பேட்டை சொன்ராஜு. அந்தத் தோழர் கூடுவாஞ்சேரி மணி. எல்லாம் ஐயாலோட் பரம கிஷ்யுங்க'- என்பதாக ஆவர்களைச் சுதர்சனனுக்கு: