உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நிசப்த சங்கீதம்

"அதைப் பத்தி நான் கவலைப்படலே...'

'நீ படற கவலையையும் சேர்த்து உங்கப்பா படம் போறாரு, பதவிகளில் சுகம் காணும் தகுதியும் நேர்மையும் இல்லாத ஒவ்வொருத்தனும் அதுக்காகப் பயந்து பயந்து சாகிறதுதான் வழக்கம். பயப்படுகிறவன் எல்லாம் பிறரைப் பயமுறுத்தியே வாழ்ந்து கொண்டிருப்பான். தீரன் தானும் பயப்படுவதில்லை; பிறரையும் பயமுறுத்துவதில்லை. ஆனால், தீர்ர்கள் இன்றைய அரசியலிலும் பொது வாழ்: விலும் குறைந்து போய்விட்டார்கள். , ,

உள்ளே அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் யாரோ முத்துராமலிங்கத்தைத் தேடி வந்திருப்பதாகச் சிவகாமிநாதனின் மகள் வந்து தெரிவித். தாள்.

தேடி வந்திருப்பது யாராயிருக்கும் என்ற யோசனை யுடனும் தயக்கத்துடனும் வெளியேவந்த முத்துராமலிங்கம். அங்கே சின்னி நிற்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். சின்னி பேசினான்:- - -

'பார்த்திட்டுப் போகலாம்னுதான் வ ந் ேத ன்... அவசரமா ஒரு தாக்கல் சொல்லணும்.’’

'உள்ளே வாயேன்...உட்கார்ந்து பேசலாம்...என்ன அவசரம்?" - - - -

"இங்கேயா வேணாம்.இத்தினி பெரிய மனுஷங்க். வீட்லே எல்லாம் துழையறதுக்கு எனக்கு யோக்கியதை இல்லே...' - . . . . சின்னி கிண்டலுக்காகவோ வம்புக்காகவோ இல்லாமல் உண்மையான பயபக்தியுடனே இப்படிச் சொன்னதை. முத்துராமலிங்கம் உணர்ந்தான். நல்லவர்களை எல்லாரும்: மதிக்கிறார்கள். ஆனால் வாழவைப்பதில்லை. நல்லவர் களிலிருந்து ஒதுங்கியும் ஒதுக்கியும் வாழ விரும்புகிறவர் களாகவே சராசரி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைக் சின்னியின் செயல் காண்பித்தது. ... - w.