நா. பார்த்தசாரதி 139 'சரி சரி! சண்டை போட்டது போதும். இந்தா, என் ரூம் சாவி. நீ வீட்டிலே போயி என் ரூமிலே இரு. நான் ஒரு மணி நேரத்திலே வந்துடறேன்’ என்று அறைச் சாவியைச் சுதர்சனனிடம் நீட்டினான் ரகு. - சுதர்சனன் சாவியை வ்ாங்கிக்கொண்டு மன்னிச் சுடுப்பா! நீ சொன்னபடி மாலையைத் தலைவருக்கு நான் போடலே. அறிமுகமில்லாதவங்களுக்குத் திடீர்னு மாலை போடறது. நாகரிகமில்லேன்னு எனக்குத் தோணிச்சு' என்றான். - { "பெரிய வம்புக்காரன் நீ...தலைவருக்கு முன்னாடி என்னைத் தலைகுனிய வச்சிட்டே' என்று சுதர்சனன்ைப் பார்த்து ரகு அலுத்துக் கொண்டான். சுதர்சனன் சாவி யோடு வெளியேறித் தெருவுக்கு வந்து சேர்ந்தான். ரகுவைப் போல் விவரந்தெரிந்தவனே இப்படிச் சிறுபிள்ளை விளையாட்டுகிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு சுதர்சனன் ஆச்சரியப்பட்டான், தன்னைச் சுற்றி சத்தம் போடத் தெரிந்த ஒரு சிறு ஆள்கட்டுள்ள கும்பலைச் சேர்த்து வைத்துக்கொள்ள முடிந்த யாரும் இங்கே தலைவராகிவிட முடிந்த நிலைமை சுதர்சனனுக்குப் புரிந்தது. பிறருடைய சிந்தனையை ஏற்காமல் தான் கூறியதையே அனைவரும் ஏற்க வேண்டும் என்று எண்ணும் அடாவடித்தனத்தை அரசியலின் பேராலோ, இலக்கியத்தின் பேராலோ சுதர்சனன் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. தலைவராயிருப்பது என்பதையே ஒரு தொழிலாகப் பண்ணிக்கொண்டு உழைக்காமல் வளரும் ஒரு தந்தக் கோபுரவாசிகளின் கூட்டம் பெருகக் கூடாது என்று சுதர்சனன் கருதினான். ஆனால் கண் முன்னால் அப்படித் தலைமைத் தொழிலின் நிரந்தர அதிபர்களாகவே அடுத் தடுத்துத் தென்பட்டார்களே ஒழிய உழைப்பு, நாணயம். ஒழுக்கம், பண்பாடு இவை உள்ள உண்மைத் தலைவர்கள். எங்குமே தென்படிக் காணோம், ஒவ்வொன்றும் ஒரு ,பிரைவேட் லிமிடெட் ஆக இருந்ததே ஒழியப் பரந்த,
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/141
Appearance