உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பொய்ம் முகங்கள் அவனது கணிப்பு. வாழ்நாள் முழுவதும் அப்படி இருந்துவிட அவனால் முடியும். முடிகிறது. முடிந்தது. - . . ஒருவேளை அவன் வாழ்வே முடிந்தாலும்கூட இந்தக் கூர்மை முடியாது. இது ஒரு தொடர்கின்ற தத்துவமாக அடுத்த தலைமுறை இளம் இலட்சியவாதிகளுக்கு இதே அளவு முனை மழுங்காமல் அளிக்கப்படும். தொடர்ந்து தரப்படும். - - ஏதோ ஒரு முலவிளக்கிலிருந்து பல அடுப்புக்களை மூட்டிச் சமைக்க முடிவதுபோல் சுதர்சனன் என்ற இந்த 'மூலக்கனல் பட்டினத்தின் எந்த மூலையிலாவது எப்படி யாவது அவியாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறவரை சமூகப் புரட்சிக்கான கருத்துக்களும் , துணிவும் சமைக்கப் படும் இடத்துக்கெல்லாம் எரிபொருளைக் கொடுத்து இயக்க இது நிச்சயமாகப் பயன்படும். அதுவரை அவனது கூர்மையும் அழியாது. கதையும் அழியாது என்ற நம்பிக்கையோடு அவனைப் பட்டினத்தில் அக்கினிக் குஞ்சாகப் பொதிந்து வைத்துப் பார்க்கலாமே! சுதர்சனன் என்ற் அந்த இளம் அக்கினிக் குஞ்சின் வெம்மை யில் பல பொய்ம் முகங்களும், முகத்துவாரங்களும் எரிந்து அழியட்டுமே! - . - அவை அழிகிற வரை அவனுக்கும் அவனுடைய கதைக் கும் பட்டினத்தில் இடமிருக்கிறது. அவை முடிய வழி இல்லை. காரணமும் இல்லை. . . . . . . தீமையை அழிக்கப் புறப்படுகிறவனின் வாழ்க்கை வசதி யானதாக அமைய முடியாது. அது வசதியான தாக அமைந்து விட்டால் தீமைகளை அவன் அழிக்க முடியாது. இந்த ஒரே காரணத்துக்காகச் சுதர்சனனை இப்போது அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே-அந்த முனை மழுங்காத போர்க்குணத்தின் கூர்மையுடனேயே சென்னை வில் விட்டுவிட்டு நாம் இதோடு விடைபெறுவோம்.