உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 20 #

டோம். இல்லாட்டி ஆபத்தாப் போயிருக்கும்' என்றார் கள் எதிர்கொண்டு ஓடிவந்திருந்தவர்கள்.

சிவகாமிநாதன் மட்டுமே அதிகமாகப் பதற்றமோ பரபரப்போ காண்பிக்கவில்லை. -

"இவ்வளவும் நான் எதிர்பார்த்ததுதான்! இதை எல்லாம் தவிர்க்க நெனைச்சுத்தான் உங்க ரெண்டு பேரை யும் கடற்கரைக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன்' என்றார் சிவகாமிநாதன்.

எல்லாரும் வீட்டை நோக்கி விரைந்தார்கள். போய்ப் பார்த்ததில் அச்சகத்துக்கு ஏற்பட்டிருந்த சேதங்கள் அதிக மாயிருந்தன. அவர்கள் எதிர்பார்த்ததையும் விட அதிகமா உயிருந்தன. இன்னும் சில வாரங்களுக்குத் தியாகியின் குரல் பத்திரிகையையே வெளியிட முடியாதபடி செய்து விடும் குரூர நோக்குடன் அத்தனை பயங்கரமான சேதங்

கள் அங்கே விளைவிக்கப்பட்டிருந்தன. . . "

இப்படிப் பயமுறுத்திக் கலவரங்களை உண்டாக்கினால், அஞ்சி நடுநடுங்கி மங்காவை வெளியே அனுப்பி விடுவார் கள் என அவர்கள் எதிர்பார்ப்பது புரிந்தது. மங்கா தன் தந்தையான மந்திரியை எதிர்த்துக் கொண்டு தங்கள் தரப்பில் சேர்ந்து தங்களோடு தங்குவதால் என்னென்ன. ஆபத்துக்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்களோ, அவை: ஒவ்வொன்றாக ஏற்படத் தொடங்கியிருந்தன. மந்திரியும் அவருடைய கட்சி ஆட்களும் காட்டுமிராண்டிகளைப் போல் புகுந்து சூறையாடியிருந்தார்கள். . . சேதங்களைப் பார்த்தபோது முத்துராமலிங்கத்துக்கும். மங்காவுக்கும், சண்முகத்துக்கும் நெஞ்சு கொதித்தது. வயது முதிர்ச்சியும் மனப்பக்குவமும் துயரங்களைக் கண்டு கலங்காத திண்மையும்தான் சிவகாமிநாதனை அந்த நிலை.

யிலும் நிமிர்ந்து நிற்கச் செய்திருந்தன. -

மங்கா கேட்டாள்: தயவுசெய்து நீங்க என்னைத் தடுக்கக்கூடாது! நானே எங்கப்பா கிட்டப்போயி இத்த