உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 "பியூனிட்டத்தான் சொல்லியனுப்பணும்னு நெனைச் சேன். அப்புறமா நானே இந்தப்பக்கமா சூபர்விஷனுக்கு வந்தேன். உம்மைத் தேடி அந்தச் சீர்திருத்த மன்றமோ சுய மரியாதை மன்றமோ, அதனோட காரியதரிசி பன்னீர்செல்வம் வந்திருக்கான். அவனை மாதிரி ஆளை எல்லாம். நான் இங்கே ஸ்கூல் காம்பவுண்டுக்கு உள்ளே'விடற வழக்க மில்லே. கேட்கிட்ட நிறுத்தி வச்சிருக்கேன். நீர் வேனும் னாப் போய்ப் பார்த்துக்கலாம்-என்றார் தலைமை: யாசிரியர். கூறிவிட்டு உடனே அங்கிருந்து போய்விட்டார். அவர். - - - சுதர்சனனுக்கு அவர் சொல்லுவது என்ன, யாரிடம், யாரைப்பற்றி என்பதை எல்லாம் நிதானித்து விளங்கிக் கொள்ளவே சிலவிநாடிகள் பிடித்தன. மெமோ அனுப்பிய தோடு தன்மேல் அவருக்கிருந்த ஆத்திரம் தீரவில்லை. என்றும் தெரிந்தது. தன்னைத் தேடி வந்திருக்கிற ஒர். ஆளைப் பள்ளிக்கூட வாயிலருகேயே நிறுத்தி வைத்திருப்ப தாகவும் வேண்டுமானால் தான் போய்ப் பார்த்துக் கொள் ளலாம் என்றும் அவனுக்கு அவர் கூறியது என்னவோ போலிருந்தது. - - ஏன்? அவரை உள்ளே விட்டுப்பிட்டா ஸ்கூலை கட்டித் தூக்கிக்கிட்டுப் போயிடுவாராக்கும்?-என்று: தலைமையாசிரியர் போனபின் சிவராஜ் எகத்தாளமாக்க் கேள்வி கேட்டார். - - - - - - - "இவர் விடாட்டி என்ன? நான் போய்க் கூட்டிக்கிட்டு வந்து இதே ஸ்டாஃப் ரூமிலே வச்சே அந்த ஆள்கிட்டப் பேசி அனுப்பறேனா இல்லியா பாருங்க"-என்று. சொல்லிக் கொண்டே எழுந்து பள்ளியின் முகப்பு வாயில் பக்கமாகச் சென்ற்ான் சுதர்சனன். * . . . -