உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பொய்ம் முகங்கள் திருமண விவகாரம் பற்றிப் பிரஸ்தாபித்தார் தலைமை கபாசிரியர், - 'பள்ளிக்கூடத்துக் காம்பவுண்டுக்கு வெளியே நீங்க என்னென்ன செய்றிங்கன்னு நான் பார்க்க மாட்டேன். நான் என்னென்ன செய்யிறேன்னு நீங்களும் பார்க்கக் கூடாது." - - "இந்த விஷயத்திலே அப்படி நான் விட்டுவிட முடியாது மிஸ்டர் சுதர்சனன். கவுண்டர் வந்து கன்னா பின்னான்னு இரைஞ்சிட்டுப் போறாரு. நம்ம ஸ்கூல் மேனேஜ்மெண்டிலேயும் கவுண்டருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர் குடும்ப விஷயத்திலே அநாவசியமாத் தலையிடறது உங்களுக்கும் நல்லதில்லே.' - "ஒரு திருமணத்துக்குத் தலைமை வகிச்சா அது எப்படிக் குடும்ப விஷயமாயிடும்?" - "கவுண்டர் சொத்துக்காரர், அவருக்கு ஒரே மகன் சொத்தை அபகரிக்க யாரோ சீர்திருத்தக் கல்யாணம்னு ஸ்டண்ட் பண்றாங்க.” - t பன்னீர்செல்வம் பொய் சொல்ல மாட்டான். கவுண்டர் மகன் அந்த ஹரிஜன பொண்ணுகிட்ட ரொம்ப நாளாப்பழகிட்டிருக்கான்னும் அதை முறைப்படுத்தத்தான் இந்த்த் திருமணம்னும் அவன் சொன்னது பொய்யாயிருக் காது." - - - "அப்படியே அந்தப் பொண்ணுகிட்டக் கவுண்டர் மகன் பழகிண்டிருந்தாலும் அதை எப்படிக் காதும் காதும் வைத்தாப்போலக் கமுக்கமா ஸ்ெட்டில் பண்ணணும்னு கவுண்டருக்குத் தெரியும். - ஒரு பெண்ணை ஏமாத்திக் கெடுத்துப் போட்டு பணக் கொழுப்பிலே ஸெட்டில் பண்ணிடலாம்னு நெனைக் கிறது. இந்தக் காலத்துலே பலிக்காது சார்!" . - "எல்லாரோட நியாயத்துக்கும் நீங்கதான் மொத்த மாக் குத்தகை எடுத்திருக்கேளா என்ன?” -