90 பொய்ம்முகங்கள் "அவன் ஜமீன்தாரையே முறைக்கிறான். அவரையே. முகத்துக்கு முகம் நிமிர்ந்து பார்த்துப் பதில் சொன்னான். அவர் வீட்டுக்குள்ளே வந்தே இவன் மத்தவங்களை வெளியே துரத்திப்பிடனும்கிறான். யாருக்கும் எதுக்குமே பயப்படற ஆளாத்தெரியலே. துணிஞ்ச கட்டையா இருக். கான். இப்படி ஆளை வச்சுக் குப்பைக் கொட்டறது. முடியாத காரியம்.' "எனக்குந்தான் பிடிக்கலை! ஆன்ா வெளியிலே அனுப். பறத்துக்கும் ஒரு முறையின்னு இருக்கே? என்ன பண்றது?" என்று கேட்டார் தலைமையாசிரியர். .’ - "ஒய் வாசுதேவன். நீர் முறை சம்பிரதாயமெல்லாம். பார்த்துக்கிட்டிருந்தீர்னா இவன் இங்கே ஊரைக் குட்டிச் சுவராக்கிப்பிடுவான். லேபர் பிராப்ளம், ஊரிலே கிஸான் ப்ராப்ளம் எல்லாமே பெரிசாயிடும். திருவள்ளுவரையும் லெனினையும் ஒப்பிட்டுப் பேசணும்னா அவன் எப்பிடிப் பட்ட மோசமான ஆளா இருக்கணும்னு பார்த்துக்குங்க" என்றார் அருள்நெறி ஆனந்தமூர்த்தி. - * "வேலைக்கு வந்து பிழைப்பு நடக்கிற இடத்திலே பெரிய மனுஷன் வீட்டிலெல்லாம் புகுந்து கலப்புக் கல்யா ணம் பண்ணி வைக்கிறேன். அது இதுன்னு கலாட்டாப் பண்ணி ஜெயிலுக்குவேற போயிட்டு வந்திருக்கான். இப்பிடி ஆளுங்களைத் தொடர்ந்து வேலைக்கு வச்சுக்கிட்டா ஸ்கூல், பேரு ரிப்பேர்ாயிடுங்க. அவ்வளவுதான் நான் சொல்வேன்' என்று ஆனந்தமூர்த்தியோடு ஒத்துப் பாடினார் பக்கத்தி விருந்த உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர். ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் என்று போட்டுக். கொண்டு ஐமீன்தார் தன்னோடு சீட்டாட வந்தவர்களை யும் தன்னைப் பார்க்க வந்தவர்களையும் தன்னோடு பேசிக் கொண்டிருப்பவர்களையும் வைத்து கொண்டே கூத்தடிப் பது தலைமையாசிரியர் வாசுதேவனுக்கே பிடிப்பதில்லை. பலதடவை இதனால் வாசுதேவனே கஷ்டப்பட்டிருக்கிறார். ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் என்றால் ஜமீன்தாருக்கு
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/92
Appearance