1 92 பொய்ம் முகங்கள் போலக் கண்ணை மூடிக் கொள்ளும் பூனைகள் இங்கே அதிகம். இரட்டைவேடமும் வெளிப்பூச்சான போலித் தியாகமும், உள்ளார்ந்த சுயநலமும், ஒளி வருவதை எதிர்த்துக் கூசும் இருண்ட மனநிலையும் உள்ளவரை இந்தியா உருப்படாது'-என்று அந்தச் சொற்பொழி வாளர் பேசியிருந்தார். வடக்கே ஒரு பல்கலைக் கழகத்தில் சோஷியாலஜிப் பேராசிரியராக இருப்பதாக அந்தச் சொற் பொழிவாளரைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டான் சுதர்சனன். அவர் கூறிய கருத்துக்கள் அவன் சிந்தனையைத் துரண்டின. tי - - - பகல் ஒன்றரை மணிக்குச் சுதர்சனன் அலுவலக அறை யில் இருந்தபோது ரகுவும், பேராசிரியரும், அவர் மனைவி யும் சிண்டிகேட் சிதம்பரநாதனும் ஒரு டாக்சியில் வந்து இறங்கினார்கள். டாக்சிக்கு வெளியூரிலிருந்து வந்திருந்த அந்தப் பேராசிரியர்தான் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்த்தார். அவர்கள் அனைவரும் தனிப் பயிற்சிக் கல்லூரி யின் அலுவலக அறைக்குத்தான் வந்திருந்தார்கள். அறைக்குள் நுழைந்ததும் சிதம்பரநாதன் சுதர்சனனுக்குப் பெரிய கும்பிடாக ஒன்றைப் போட்டுவிட்டுச் செளக் கியமா இருக்கீங்களா?' என்று வினவினார். சுதர்சனன் தலையை ஆட்டினான். ரகு உள்ளே நுழைந்ததும் அடுத் தடுத்து இரண்டு டெலிஃபோன்கள் செய்தான்-ஒரு ஃபோன் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு. மற்றொன்று கோட்டையில் செகரெட்டேரியட்டுக்கு. டைரக்டர் ஆபீசுக்கோ, கோட்டைக்கோ புறப் படறத்துக்கு முந்தி இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்குச் சில்லறை மாத்தி வச்சுக்குங்க. தேவைப்படலாம்'என்றார் சிண்டிகேட் சிதம்பரநாதன். * . "முன்னாடியே மாத்தி வச்சிருக்கேன்! கவலைப்படா திங்க'-என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் டிரான்ஸ்ஃர் தொல்லைக்கு ஆளாகி வந்திருந்த பேராசிரி யேர். சிதம்பரநாதனே மேலும் விளக்கினார்: ".
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/194
Appearance