- திசப்த சங்கீதம்
"நான் போகப் போறதில்லே அப்பா. நீங்களே. பர்மிங் ஹாம் அண்ணனுக்கும் இதை எழுதிடலாம்.'
"என்னம்மா இது? திடீர்னு இப்படிக் கல்லைத் தூக்கிப் போடறே? ஏன் உனக்கு என்ன வந்திச்சு?"
"நான் உறுதியாத்தான் சொல்றேன். மேற்படிப்புக் காக நான் பர்மிங்ஹாம் போகப் போறதில்லை." ...
"ஏன்?...நான் வேணா அந்தச்சிவகாமிநாதனோ சிங்கக் குரல் நாதனோ...அவனை விட்டுடறேன்...ஏம்மா உனக்கே வெக்கமா இருக்க வேணாமோ? மினிஸ்டரோட டாட்டரா இருந்துக்கிட்டுச் சேரி குப்பத்து ஆளுங்க மாதிரிக் கண்ட கண்ட எதிர்க்கட்சிப் பொதுக்கூட்டத்திலே போயி நீயும் கேட்டுக் கைத்தட்டிக்கிட்டு நிக்கறது உனக்கே நல்லர் இருக்கா? என்னை நாக்கிலே நரம்பில்லாமத் திட்டிப் பேசற கூட்டத்திலே என் மகளே போய் வளையைக் கழட்டிக் குடுத்து, கைதட்டிக்கிட்டு நின்னான்னா எனக்குக் கோபம் வருமா இல்லியா? நீயே சொல்லு.'
"அதுக்குக் கோபம் என் மேலே தானே வரணும்ப்பா? பேசினவர் மேலே கோபப்பட்டு அவர் வீட்டுக்குப் போலீஸ் காரங்களை அனுப்பி ரெய்டு பண்ணச் சொல்றது என்ன நியாயம்? இன்னிக்கி இந்த தமிழ்நாட்டுலே ஜனங்களுக்குத் தலைவன்னு தெரியிறவங்கள்ளே ஒரே ஒரு போக்கியமான நல்ல மனுஷர் சிவகாமிநாதன் தான்.'
"ஏதேது.பேசறதைப் பார்த்தா...இன்னும் கொஞ்ச நாளிலே நீயே அவங்கூடச் சேர்ந்துக்கிட்டு மேடையிலே என்னை எதிர்த்துப் பேசினாலும் பேசுவே போலிருக்கே." - "சரியாத்தான் சொல்றிங்கப்பா: நாளைக்கே நான் அதைச் செய்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லேப்பா. நான் அதையும் முடிவு பண்ணியாச்சு...” - - - 'இதெல்லாம் ஒண்ணுமே நல்லா இல்லேம்மா? அமெரிக்கன் செண்டரிலிருந்தே டிரைவ் இன்னுக்குப்