நா. பார்த்தசாரதி 22 |
டிருக்கிறார் என்று புரிந்தது. சிவகாமிநாதனின் சேவா சிரமம் போன்ற புனிதமான வீடு தன்னால் சண்டைக்கள மாக மாறுவதை முத்துராமலிங்கம் விரும்பவில்லை.
அப்போது அவன் தன் பெற்றோரிடம் கறாராகப் பேசினான். 'இதோ பாருங்க இங்கே வந்து நின்னுக்கிட்டு அநாவசியமாகக் கத்தக்கூடாது. எனக்கும் இவளுக்கும் இது தெய்வ சந்நிதானம் மாதிரி. இங்கே இருக்கிறது வெறும் மனுஷன் இல்லே, களையையும், காளான்களையுமே பயிர் செய்து பிழைக்கிற இன்றைய உலகில் ஒரு சத் திய விவசாயியை இங்கே நாங்க அபூர்வமா வச்சுக் கும்புட்டுக் கிட்டிருக்கோம். என்னைப் பெத்து வளர்த்த முறைக்கு நான் உங்களுக்கு என்ன செய்யனுமோ அதை மாசந் தவறாமச் செஞ்சிடத் தயாராயிருக்கேன். மூட்டை தூக்கியோ, கை வண்டி இழுத்தோ கூட உங்களுக்குப் பணம் அனுப்ப என்னாலே முடியும்.' . z · · · ·
'உன் பணத்துக்காக ஒண்னும் தாங்க காத்துக்கிடக் கலேடா இப்பிடி உருப்படாமப் போறியேன்னுதான்
சொல்ல வந்தேன்,' . . .
இதற்கு அவனும் ஏதோ கடுமையாகப் பதில் சொல்ல முற்பட்டபோது அவனுடைய தாய் அருகே வந்து வாயைப் பொத்தினாள். தந்தையும், மகனும் இன்னொருவருடைய விட்டில் அடித்துக்கொண்டு நிற்பது அந்த அம்மாளுக்குப் பிடிக்கவில்லை. பசுங்கிளித்தேவரோ அப்போது அவன்
மேல் கடுங்கோபத்தோடு இருந்தார்: .
அன்று மாலை வரை வாய்ப்பேச்சும், மனஸ்தாபமுமாக சண்ட்ை நீடித்தது. மாலையில் அவர்களை எழும்பூர்சென்று இரயிலேற்றிவிாடு வந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். முகத்தைத் திருப்பிக்கொண்டார். தாய்க்காகத்தான் அவன் வழி யனுப்பப் போயிருந்தான். பெற்றோரது கோபத்துக்கும் எரிச்சலுககும் அஞ்சி அவன் இரயில் நிலையத்துக்கு , மங்காவை உடனழைத்துச் செல்லவில்லை.