பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 409

இரண்டு ரூபாயோ வசூலித்தால்கூட அது போதாது. விடுமுறை தொடங்கியதுமே ஒரு பகுதி மாணவர்களும், மகாநாடு முடிந்தவுடன் எஞ்சியவர்களும் ஊர் திரும்பி விட்டதால் அப்போது நகரில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைகளில் மணவாளனின் இயல்பு தனியானது, நழுவி ஒடவோ, தப்பித்துக் கொள்ளவோ, பொறுப்பைத் தட்டிக் கழிக்கவோ அவருக்குத் தெரியாது. மதுரையில் வீட்டுக்குத் தந்தி கொடுத்தார் அவர். மணவாளனின் தந்தை மறு நாளே மகன் பெயருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பேங்க் டிராஃப்ட் அனுப்பி வைத்தார். மகாநாட்டுச் செயற்குழு அன்று மாலையிலேயே அவசரமாகக் கூட்டப்பட்டது. அண்ணாச்சிக் கடையின் பின்புறம் செயற்குழு சந்தித்தது. மணவாளன் நிலைமையை விவரித்தவுடன் தயாராகக் காத்திருந்தவர் போல் மடியிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை நோட்டுக் கற்றைகளாக எடுத்துக் கொடுத்தார் அண்ணாச்சி. “நீங்களே தொடர்ந்து சிரமப்படlங்க...? இதெப்படி நீங்க...? எதை விற்றீங்க? என்ன பண்ணினிங்க? உங்க உழைப்புக்கு நாங்க எவ்வளவோ கடமைப்பட்டி ருக்கோம். நீங்க பணம் எதுவும் தரணும்கிறது இல்லே அண்ணாச்சீ!” என்றார் மணவாளன். அண்ணாச்சி இதைக் கேட்டுச் சிரித்தார்.

“சும்மா எடுத்து வையுங்க. நிலைமை என்னன்னு உங்களைவிட எனக்கு நல்லாத் தெரியும். உபசாரமெல்லாம் நமக்குள்ளே எதுக்கு? பாக்கி எல்லாம் சீக்கிரமாக் கொடுத்து முடிக்கலியின்னா ஒவ்வொருத்தனா மகாநாட்டுக் கமிட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவான்.”

“எப்பிடி இது?. உங்களாலே இவ்வளவு பெரிய தொகை.?”

“நீங்க கோபப்படலையின்னா நான் சொல்றேன்.” “சொல்லுங்க. கோபம் என்ன இதிலே?”

“கடை உபயோகத்துக்குப் பேப்பர் போடக் கொள்ள ரெண்டே ரெண்டு சைக்கிள் மட்டும் மீதம் வைச்சுக்கிட்டு