பக்கம்:திரு. வி. க.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஜ் அச. ஞானசம்பந்தன்

“இந்தியாவின் இயற்கை ஒரு நோக்குவழியே அறத்தை வளர்க்குந் தன்மையது. அறவளர்ச்சிக்கு இந்தியா தகுதி வாய்ந்ததென்க.

அறத்திற் சிறந்தது, எது? அஹிம்ஸை, இஃதொன் றுள்ள இடத்தில் மற்ற அறக் கூறுகளெல்லாம் தாமே விளங்கும். அஹிம்ஸைக்கு அடிப்படை தயை. அஹிம்சா பரமோ தர்ம என்னுந் திருமொழியும் முன்னாளில் எந்நாட்டில் பிறந்தன? வளர்ந்தன? சரித்திர உலகை நோக்குக.

இந்தியாவின் இயற்கை வளம், அஹிம்ஸா தருமத்தை ஒம்பும் பண்பு வாய்ந்தது. அஹிம்ஸை வளர்ச்சிக்குப் போதனையுடன் - சாதனையுடன் - இயற்கை வளமுந் தேவை.

மற்ற நாடுகளில் அஹிம்ஸா தர்மம் தோன்றுவ தில்லையோ? வளர்வதில்லையோ? போதனையினா லும் சாதனையினாலும் பிற நாடுகளிலும் அஹிம்சா தர்மம் தோன்றும்; வளரும். ஆனால், அவ்விடங்களில் அத்தருமம் நில்ைத்து நிற்பதில்லை. காரணம் அவ்விடங்களில் இயற்கை வளமெனும் ஒளியை அஹிம்ஸா தர்மம் பெறுவதில்லை. அதனால் அஃது அவ்விடங்களில் ஒரோவழி வளர்ந்து வீழ்ந்துபடுவதா கிறது.

இந்தியாவின் இயற்கை, அஹிம்ஸா தர்மம் வளர்தற்குரிய ஒளியைக் கால்கிறது. அதனால் அஹிம்ஸா தர்ம வளர்ச்சிக்கு இந்தியா ஒரு சக்தி பீடமாக (Power House) விளங்குகிறது. பிற நாடுகளி னின்றும் இந்தியா போன்று இந்தியாவைத் தாய் நாடாகக் கொண்டவரும் நாளடைவில் அஹிம்ஸை யில் பற்றுள்ளங் கொள்வோராவர். இந்தியாவின் இயற்கை, மனோநிலையையும் மாற்றவல்லதென்க.”

இந்தியாவும் விடுதலையும், பக்கம் 10, 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/122&oldid=695409" இலிருந்து மீள்விக்கப்பட்டது