பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் பணி ஏற்றல் # 1 கலந்துக்கொள்ள சிறிதும் விரும்பவில்லை. வற்புறுத்தலின் பேரில் ஒருவாறு ஒப்புக்கொண்டேன். ஞாயிறு மாலை புறப் பட்டு அன்றிரவு பத்து மணிக்கு நூல்களுடன் அமிர்தவல்லி உணவு விடுதியை வந்தடைந்தேன். விரைவில் குடும்பத்தைக் காரைக்குடி கொணர வேண்டும் என்று துறையூரில் சில ஏற்பாடுகள் செய்தேன். சோபனபுரம் நல்லுசாமி ரெட்டியார் என் நெருங்கிய நண்பர். அவரிடம் குதிாைவால் நெல்லில் புழுங்கல் இரண்டு முட்டையும் பச்சையில் மூன்று மூட்டையும் தயார் செய்யு மாறு ஏற்பாடு செய்தேன். மூன்று மாதத்திற்கு ஆகுமாறு நல்ல விறகு வீட்டிலிருந்தது. அதையும் காரைக்குடிக்குக் கொணரத் தீர்மானித்தேன். பாலுக்கு நல்ல பசு மாடு வைத்திருந்தேன். அதை விற்க ஏற்பாடு செய்துவிட்டேன். பீரோ, மேசை, நாற்காலி, கட்டில்கள் (மூன்று) இருந்தன. எல்லாவற்றையும் சாமான் வண்டி (Lorry) யில்தான் கொணர வேண்டும் என்று திட்டம் செய்தேன். இந்தப் பொறுப்பை திரு. நல்லுசாமி ரெட்டியாருக்கு விட்டிருந்: தேன். லாரியில் சாமான்களுடன் வருவதற்குப் பள்ளி. உதவியாள் P. முத்துசாமியைப் பணித்திருந்தேன். ஒரு வாரம் வீடு தேடும் படலம் காரைக்குடியில் தொடர்ந்தது. இருபது நாட்களுக்குள் வீடு கிடைத்தது; ரூ 35 - வாடகை பேசி முன் பணமும் கொடுத்துவிட்டேன். வீட்டுக்கு உரிமையாளர் திரு. சு. ராம. கிருஷ்ணப்ப செட்டியார் மிக நல்லவர். பொதுவாக தன வைசிய இளைஞர்கள், பெரியவர்கள் புதியவர்களுடன் மிக அன்பாகப் பழகி வேண்டிய உதவிகளைச் செய்வது அவர் களின் தனிச்சிறப்பு: உயரியபண்பு. நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சிவிட்டேன். வீடு புதிதாகக் கட்டப்பெற்றிருந்த வீடு. சந்துக்குள் இருந்தாலும் எல்லா வசதிகளுடன் அமைந் திருந்தது, ஒரு நல்ல நாள் பார்த்து அன்று குடும்பத்தையும் சாமான்களையும் கொணர்வது என்று நாளும் உறுதியா யிற்று. இரண்டு நாள் முன்னதாகக் காரைக்குடியிலிருந்து