உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதுவை (மை)க் கவிஞர் திண்ணம் காணிக் பச்சை வண்ணன் பாதத் தானை, எண்ணம் கெடுதல் வேண்டா; திண்ணம் விடுதலை திண்ணம்' என்ற பாடல், கனணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை அடியொற்றி அமைந்தது. இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழிந்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழி திடல் மறக்கிலேனே.19 என்று சுதந்திர தேவிக்குத் துதி பாடுகின்றார். திருத் தொண்டத் தொகையைப் பாடி அடியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர் சுந்திரமூர்த்தி அடிகள். இதுவே பின்னர் திருத்தொண்டர் அந்தாதியாகவும், திருத் தொண்டர் 17. தே. கீ. 12. பாரதமாத நவரத்தினமாலை-6 18. திருவாய் 10, 5 : 1. . 19. தே. கீ. சுதந்திர தேவியின் துதி-1