பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை 137 என்று வினைப் பயனையும் விதியின் செயலையும் வலியுறுத்து கின்றார். இப்பகுதியில் கவிஞரும் விதியின் வலிமையைத் தற் கூற்றாக வலியுறுத்துவதைக் காண்கின்றோம். செல்வத்தை யெல்லாம் இழந்து நிற்கும் தருமனை நோக்கி, நாடிழக்க வில்லை-தருமா! நாட்டை வைத்திடு என்று சகுனி சொல்லும்போது வெகுண்டெழுந்த விதுரன் பேச்சிலும் சூதின் கொடுமையைக் காட்டுகின்றார் கவிஞர். திருதராட்டிரனை நோக்கிப் பேசுகின்றான்: சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போலப் பேதை நீயு முகமலர் வெய்திப் பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்; மீது சென்று மலையிடைத் தேனில் மிக்க மோகத்தி னாலொரு வேடன் பாத மாங்கு நழுவிட மாயும் படும லையுச்சரி வுள்ளது கானான். மற்றுநீ ருமிச் சூதெனும் கள்ளால் மதிம யங்கி வருஞ்செயல் காணிர்! முற்றுஞ் சாதி சுயோதன னாமோர் மூடற் காக முழுகிட லாமோ? பற்று மிக்கஇப் பாண்டவர் தம்மைப் பாத கத்தி லழித்திடு கின்றாய்; கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலிற் சாயங் கரைத்ததொப் பாமே!